குஜராத் வன்முறையில் ஒருவர் பலி
வதோதரா (குஜராத்):
குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதையடுத்து வதோதரா நகரில்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. பா.ஜ.க. அமோகமான வெற்றியைப் பெற்றுஅம்மாநிலத்தில் மீண்டும் நரேந்திர மோடியே முதல்வராகிறார்.
இந்நிலையில் வதோதரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான யோகேஷ் படேல் வெற்றி பெற்றார். இதையடுத்துபா.ஜ.கவினர் பதற்றம் மிகுந்த ராவ்புரா பகுதியில் பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
ஆனால் இந்த ஊர்வலத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அப்பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனங்கள்அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. அங்குள்ள பல கடைகளையும் வன்முறையாளர்கள் எரித்தனர்.
இந்தப் பயங்கரமான வன்முறையின்போது ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் 17 பேர்படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
நூற்றுக்கணக்கான போலீசார் விரைந்து சென்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளைவீசினர்.
ஆனால் வன்முறையாளர்கள் தொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடவே, அவர்களைப் போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தி விரட்டியடித்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து வதோதராவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நேற்று மாலை முதல்இரவு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இதையடுத்து பதற்றம் தணிந்ததால் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டது. மீண்டும்வன்முறை ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் இந்நகரில் குவிக்கப்பட்டனர்.
ஆனால் அதை மீறி இன்றும் பயங்கர வன்முறை ஏற்பட்டது. பானிகேட் பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவன்முறையாளர்களைக் கலைப்பதற்காக போலீசார் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
22ம் தேதி மோடி பதவியேற்பு:
இதற்கிடையே குஜராத் சட்டசபை பா.ஜ.க. உறுப்பினர்களின் தலைவராக மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று நடைபெற்ற புதிய பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து வரும் 22ம் தேதி குஜராத் முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்றுக் கொள்வார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications