டெல்லியில் புருவங்களை உயரச் செய்த ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி & சென்னை:

காவிரியையும் மகாநதியையும் முதலில் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில்நடந்த தேசிய வளர்சசிக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.

டெல்லியில் நேற்று நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பியஅவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நதிகளை 2016ம் ஆண்டுக்குள் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மிக நீண்ட காலமாகும். எனவேஇந்தத் திட்டத்தை முன்னதாகவே விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக மகாநதியை, காவிரியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில்கோரிக்கை வைத்தேன்.

சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதியுதவி சரியாக கிடைப்பதில்லை. ஆனால், மோசமாக செயல்படும் சிலமாநில அரசுகளுக்கு அனைத்து நிதியுதவிகளும் தவறாமல் கிடைக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றார்ஜெயலலிதா.

முன்னதாக டெல்லியில் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா பா.ஜ.கவுக்கு முழு ஜால்ரா அடித்தார்.

நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார். ஆனால், மத்திய அரசுதவறான பொருளாதார கொள்கைளை வைத்துக் கொண்டு 8 சதவீத வளர்ச்சியை அடையப் போவதாகக் கூறுவதுஏற்கத் தக்கதல்ல என பெரும்பாலான மாநில முதல்வர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஆனால், ஜெயலலிதா பேசுகையில் 8 சதவீத வளர்ச்சியைத் தொட்டுவிட முடியும். இந்த விஷயத்தில் பிரதமரின்கருத்தை ஆதரிக்கிறேன் என்றார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமலாக்கும் பொருளாதாரத்திட்டங்களை பிற கட்சிகள் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று ஜெயலலிதா பேச பிற மாநிலமுதல்வர்களின் புருவங்கள் உயர்ந்தன.

அதே நேரத்தில் பிரதமர் மற்றும் பா.ஜ.க. மத்திய அமைச்சர்கள் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

மொத்தத்தில் ஜெயலலிதாவின் இந்த டெல்லி பயணம் பா.ஜ.கவுடன் நெருங்கும் அவரது முயற்சிகளுக்கு ஒருபூஸ்ட் கொடுத்துள்ளதை மறுக்க முடியாது.

மோடி பதவியேற்பில் ஜெ:

நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா இன்று காலை குஜராத் புறப்பட்டுச் சென்றார்.

சிறப்பு விமானத்தில் அகமதாபாத் புறப்பட்ட அவரை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

குஜராத்தில் பா.ஜ.க. முதல்வராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றார். பிரதமர் வாஜ்பாய்,துணைப் பிரதமர் அத்வானி, மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஹரியாணா முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தவிர மற்றபடி பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமே இருந்த மேடையில் ஜெயலலிதாவும் பங்கேற்றது மிகுந்தஅரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

மோடியின் தலைமையிலான 9 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+