நான் பெண்ணல்ல, ஆண்: தென்காசி நீதிமன்றத்தில் வினோத வழக்கு
தென்காசி:
தென்காசி நீதிமன்றத்தல் ஒரு வித்தியாசமான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு இளம் பெண தன்னை ஆணாகஅறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
17 வயதே ஆன உமா மகேஸ்வரி என்ற பெண் தான் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனது பெயரையும் அவர் உமாமகேஸ்வரனாக மாற்றிக் கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாக மாறி வந்தேன். எனக்கு ஆண்பாலுக்கான உறுப்புக்கள் உருவாக ஆரம்பித்தன.இதையடுத்து ஒரு ஆபரேசனையும் செய்து முழு ஆணாக மாறிவிட்டேன். இதையடுத்து 1999ம் ஆண்டிலிருந்தே எனது பெயரைஉமா மகேஸ்வரன் என்று மாற்றிவிட்டேன்.
எனவே, நான் இனி பெண்ணில்லை. என்னை ஆணாகவே அங்கீகரிக்க வேண்டும். இதற்கான உத்தரவை நீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தென்காசி முதன்மை துணை நீதிபதி நூர் முகம்மத் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு மருத்துவப்பரிசோதனைகள் நடத்தவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவருக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோதனைகள் நடக்க உள்ளன. இதற்காகதிருநெல்வேலி செல்லுமாறு உமா மகேஸ்வரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மருத்துவக் குழுவினரின் அறிக்கை வந்த பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்த மனுவை உமா மகேஸ்வரி தென்காசி முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், மனுவை நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவர் துணை நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications