நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 8 இஸ்லாமிய பாதுகாப்புப் படை தீவிரவாதிகள் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளில் பதுங்கியிருந்த 8 இஸ்லாமிய தீவிரவாதிகளைசென்னை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தன் தமிழகத்தில் 11 இஸ்லாமிய பாதுகாப்புப் படைத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களது பிற கூட்டாளிகள்தலைமறைவாகிவிட்டனர்.
இவர்களைப் பிடிக்கத் தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் இரு வாரங்களுக்கு முன் கைதானகாயல்பட்டனம் அரபிக் கல்லூரி முதல்வர் அமீத் பக்ரி கொடுத்த தகவலின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில்சபியுல்லா என்ற கண்ணன் நேற்று பிடிபட்டார்.
இவர் கொடுத்த தகவலின் மேலும் 7 பேர் பிடிபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனத்தைச் சேர்ந்த முகம்மது சலீம், அப்துல் ரஹீம், சக்காரியா, முகம்மது ஹசன்மற்றும் நெல்லை மாவட்டம் கயத்தாறு பகுதியில் அலாவுதீன், ஷேக் அப்துல் காதர் மற்றும் ஹசன் ஆகிய 3 பேர்பிடிபட்டனர்.
இவர்கள் அனைவரும் செளதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமியபாதுகாப்புப் படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பானஐ.எஸ்.ஐ. ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் தவிர மேலும் சில தீவிரவாதிகள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்என்றும் தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications