சேலம் சிறையில் கைதிகள் தாக்கியதில் வார்டன் கை முறிந்தது

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் சிறையில் கைதிகள் பயங்கரமாகத் தாக்கியதில் ஒரு சிறை வார்டனின் கை முறிந்தது. மேலும் 3 வார்டன்கள்பலத்த ரத்த காயம் அடைந்தனர்.

பயங்கரக் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக இப்ராஹிம் மற்றும் சுதீர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரு வழக்கு தொடர்பாக நேற்று சென்னை நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அந்த இரண்டு கைதிகளும் இன்று காலை மீண்டும் சேலம் சிறைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள்இருவரையும் தனித் தனி செல்களில் அடைக்க சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து தனி அறைகளில் அடைப்பதற்காக இப்ராஹிமையும் சுதீரையும் சிறை வார்டன்கள் அழைத்துச்சென்றனர்.

ஆனால் தங்கள் இருவரையும் ஒரே அறையில் அடைக்க வேண்டும் என்று கூறி அந்த இரண்டு கைதிகளும் அடம்பிடித்தனர். அதற்கு சிறை வார்டன்கள் மறுக்கவே, அவர்களை இரு கைதிகளும் திடீரென்று பயங்கரமாகத்தாக்கினர்.

கைதிகளின் திடீர்த் தாக்குதலால் சிறை வார்டன்கள் நிலைகுலைந்து போயினர். ஆனால் அவர்கள் சுதாரிப்பதற்குமுன்பாகவே அவர்களைக் கைதிகள் சராமாரியாகத் தாக்க ஆரம்பித்தனர்.

இந்தத் தாக்குதலில் பொன்ராஜ் என்ற வார்டனின் கை எலும்பு முறிந்தது. மேலும் மூன்று வார்டன்களுக்கும் பயங்கரரத்தக் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சேலம் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில்நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து வார்டன்களை மீட்டனர்.

கைதிகள் இருவரையும் மடக்கிப் பிடித்து தனித்தனி சிறைகளில் அடைத்தனர்.

பொன்ராஜும் மற்ற மூன்று வார்டன்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்குஅவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் சமீபத்தில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட 8 அல்-உம்மா தீவிரவாதிகளும் சேலம் மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்தத் தண்டனைகளை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாகவே இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமானஅல்-உம்மா கைதிகள் பெரும்0 கலவரத்தில் ஈடுபட்டு வந்தனர். துணை போலீஸ் கமிஷனர் கணேசன்தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவர்களை அடக்கினர்.

இந்நிலையில் வார்டன்களை இரு கைதிகள் தாக்கிக் காயப்படுத்திய சம்பவம் சேலம் சிறையில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+