மீண்டும் வெடிக்கிறது அயோத்தி விவகாரம்: டெல்லி விரைந்தார் சங்கராச்சாரியார்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் கிளர ஆரம்பித்துள்ளதால் இந்த விஷயத்தில் காஞ்சிசங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளின் உதவியை பிரதமர் வாஜ்பாய் கோரியுள்ளார். இதையடுத்துஇன்று டெல்லியில் வாஜ்பாயை சங்கராச்சாரியார் சந்திக்கிறார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பிரச்சனைக்குரிய இடத்தில்பூஜை நடத்தப் போவதாகவும் அறிவித்து கடந்த ஆண்டு விசுவ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) பெரும் ஊர்வலங்கள்,போராட்டங்களை நடத்தியது.
இதனால் மீண்டும் மதக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து காஞ்சி சங்கராச்சாரியாரின் உதவியைபிரதமர் வாஜ்பாய் நாடினார். இதையடுத்து சங்கராச்சாரியார் வி.எச்.பி. மற்றும் முஸ்லீம் தலைவர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினார்.
மீண்டும் பிரச்சனை கிளப்பும் வி.எச்.பி.:
இதைத் தொடர்ந்து பூஜையை சர்ச்சைக்குரிய இடத்திற்கு வெளியே நடத்த வி.எச்.பி. ஒப்புக் கொண்டது.சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள நிலத்தை வி.எச்.பியிடம் தரச் சொல்லி சங்கராச்சாரியார் இஸ்லாமிய சட்டவாரியத்திடம் வற்புறுத்தினார்.
ஆனால், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை வி.எச்.பி. வசம் தரமுடியாது என இஸ்லாமிய சட்ட வாரியம் கூறிவிட்டது.
இந்நிலையில் அயோத்தி விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தை இம் மாத இறுதிக்குள்எங்களிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று வி.எச்.பி. மீண்டும் கெடு விதித்துள்ளது.
இது தொடர்பாக 22ம் தேதி சாதுக்கள் மாநாட்டையும் நடத்த உள்ளது. இதனால் வி.எச்.பியை சமாதானப்படுத்தகாஞ்சி சங்கராச்சாரியாரின் உதவியை பிரதமர் வாஜ்பாய் மீண்டும் நாடியுள்ளார்.
இதையடுத்து சங்கராச்சாரியார் நேற்று டெல்லி சென்றார். இன்று மாலை வாஜ்பாயை சங்கராச்சாரியார்சந்திக்கிறார். மேலும் சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல்ஆகியோரும் சங்கராச்சாரியாரைச் சந்திக்க உள்ளனர்.
நிலத்தை தர ஆலோசனை?
அப்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தைச் சுற்றியுள்ள நிலத்தை வி.எச்.பியிடம் ஒப்படைப்பதில் உள்ளசட்ட விவகாரங்கள் குறித்து ஜேட்லியும் சங்கராச்சாரியாரும் பேசுவர். நிலத்தை நீதிமன்றத்தின் எதிர்ப்பு இல்லாமல்வி.எச்.பியிடம் ஒப்படைக்க முடியுமா என இருவரும் ஆலோசிப்பர் என்று தெரிகிறது.
இதற்கிடையே நேற்றிரவு சங்கராச்சாரியார் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமைச் சந்தித்துப் பேசினார்.டாக்டர் கலாம் ஜனாதிபதியான பின்னர் இருவரும் சந்திப்பது இதுதான் முதல் முறையாகும்.
சங்கராச்சாரியார் பேட்டி:
இன்று மாலை வாஜ்பாயைச் சந்திக்க உள்ள சங்கராச்சாரியார் நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த ஆண்டு அயோத்தி விவகாரத்தில் நான் தலையிட நேர்ந்தது. மத்திய அரசு அழைத்ததன் பேரில் டெல்லிவந்து சமரசப் பேச்சு நடத்தினேன்.
ஆனால், இம்முறை அதற்கான அவசியம் இல்லை. நானாகத்தான் டெல்லிக்கு வந்துள்ளேன். இன்று மாலைபிரதமைரை நான் சந்திக்கவுள்ளேன். அயோத்தி விவகாரம் தொடர்பாக நான் அவரிடம் எதுவும் பேசப்போவதில்லை.
ஆனால், அயோத்தி விவகாரத்தில் மீண்டும் தலையிடுமாறு வாஜ்பாய் கேட்டுக் கொண்டால் சமரசம் ஏற்படுத்தமுயற்சிப்பேன்.
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை வி.எச்.பி. எப்படியாவது தன் வசம் கொண்டுவர வேண்டும்.நிச்சயம் அந்த நிலம் வி.எச்.பியிடம் வந்து சேரும் என்று நம்புகிறேன் என்றார் சங்கராச்சாரியார்.
ஹரியானா மாநிலம் பிவானியில் உள்ள சிவன் கோவில் குடமுழுக்கு விழாவில் நாளை சங்கராச்சாரியார் கலந்துகொள்கிறார்.
அத்வானி கருத்து:
இதற்கிடையே அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமோ அல்லது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தான் தீர்வு காண வேண்டும்என துணைப் பிரதமர் அத்வானி கூறினார். சிங்கப்பூரில் உள்ள அவர் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இஸ்லாமிய சட்ட வாரியம் எதிர்ப்பு:
இந் நிலையில் அயோத்தி விவகாரம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாயை சங்கராச்சாரியார் தனியே சந்தித்துப் பேசுவதற்கு இஸ்லாமிய சட்ட வாரியம் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசுவதைவிட்டுவிட்டு வி.எச்.பிக்கு ஆதரவான சங்கராச்சாரியாரை மட்டும் பிரதமர் சந்திப்பதுஏன் என்று அந்த வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தலும் அயோத்தியும்:
விரைவில் ராஜஸ்தான், ஹிமாச்சல், மத்தியப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை மனதில்வைத்தே பா.ஜ.கவுக்கு ஆதரவாக அயோத்தி பிரச்சனையை வி.எச்.பி. கிளப்புவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications