ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்தையும் மீறி மிக அதிகமான சொத்துக்களைக் குவித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, அவரது உயிர்த் தோழி சசிகலாஉள்ளிட்ட 4 பேர் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) முதலாவது தனி நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வசம் இவர்களது வருமானத்தையும் மீறி ரூ. 67 கோடி அளவுக்குசொத்துக்கள் உள்ளன. இது தொடார்பாக திமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட் டுவந்தது. காவல்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு இந்த வழக்கில் விசாரணைநடத்தி வந்தார்.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது. தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டநல்லம்மநாயுடு சாட்சியம் அளிப்பார்.

வேலூரில் ஜெயலலிதா:

இந் நிலையில் வேலூரில் ரூ. 134 கோடி மதிப்பிலான அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஜெயலலிதாதனி ஹெலிகாப்டரில் அங்கு சென்றார்.

வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக் கல்லூரி மைதானத்தில் இதற்கான விழா நடக்கிறது.

சென்னைத் துறைமுக கடலோரக் காவல்படை ஹெலிபேடிலிருந்து அவரது ஹெலிகாப்டர் வேலூர் புறப்பட்டுச் சென்றது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+