குணமடைந்தார் நெடுமாறன்: மீண்டும் கடலூர் சிறையில் அடைப்பு
கடலூர்:
உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நெடுமாறன். பல்வேறுவழக்குகள் தொடர்பாக திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ளநீதிமன்றங்களுக்கு மாற்றி மாற்றி அவர் அலைக்கழிக்கப்பட்டார்.
இதனால் அவர் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி அவருடைய உடல் நிலை மோசமாகவேசிறையிலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால் நெடுமாறனின் உடல் நிலை மேலும் மோசமாகவே அவர் அன்று பிற்பகல் கடலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெடுமாறன் உடல் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர், இது தொடர்பாக தமிழக அரசைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நெடுமாறன் நேற்று குணமடைந்தார். இதையடுத்து அவர் மீண்டும்கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications