ரேஷன் கடைகளில் "சரக்கு" விற்க உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
ரேஷன் கடைகளில் மது பானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள 1,500 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு மது பானங்களை விற்பதற்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து இதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெண்கள் அதிகமாக வரும் ரேஷன்கடைகளில் மது பானங்களை விற்க அனுமதி தரக் கூடாது என்று அக்கட்சிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து சில்லரை மது பான விற்பனையாளர்கள் பொங்கி எழுந்தனர்.அவர்களில் சிலர் தமிழக அரசின் இந்த முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர்.
ரேஷன் கடைகளில் மது பானங்களை விற்க அனுமதித்தால், அது உரிமம் வாங்கி செயல்படும் தங்களுக்குப் பெரும்நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் எனவே அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில்அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த மனுவை இன்று நீதிபதி மிஸ்ரா விசாரித்தார். இதையடுத்து அவர் தன் தீர்ப்பில், மதுபான விற்பனையில்தற்போது உள்ள நிலைய தொடர வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் மதுபானங்களை விற்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும் இந்த உத்தரவு இவ்வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியநீதிபதி மிஸ்ரா, இதன் அடுத்தகட்ட விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications