சாத்தான்குளம் தேர்தல்: மகேந்திரனை தோற்கடிக்க சிறப்பு பூஜை நடத்திய நீலமேகவர்ணம்
சங்கரன்கோவில்:
காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் தோற்க வேண்டும் என்று வேண்டி சங்கரன்கோவில் கோவிலில்அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் சிறப்புப் பூஜை நடத்தினார். தியானத்திலும் அவர் ஈடுபட்டார்.
வரும் 26ம் தேதி சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. நீலமேகவர்ணம்,மகேந்திரன் தவிர இங்கு போட்டியிடும் மற்ற 23 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள்தான். இதனால்அவர்கள் இருவருக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க சாத்தான்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் படிப்படியாக சூடு பிடித்துவருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமிகோவிலுக்கு நேற்று சென்ற நீலமேகவர்ணம், அங்கு தன் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடுசெய்தார்.
மகேந்திரன் தோற்க வேண்டும் என்பதற்காக "சத்ரு சம்ஹார சஹஸ்ரநாம" அர்ச்சனை அங்குநீலமேகவர்ணத்துக்காக செய்யப்பட்டது.
பின்னர் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தியானமும் மேற்கொண்டார்நீலமேகவர்ணம்.
நீலமேகவர்ணத்துடன் ஏராளமான அதிமுகவின தொண்டர்களும் அர்ச்சனையில் ஈடுபட்டனர்.
பாட்டு பாடி பிரசாரம் செய்யும் மாணவி:
இதற்கிடையே சாத்தான்குளம் தொகுதியில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமானஜெயலலிதா குறித்த பாடல்களைப் பாடி நீலமேகவர்ணத்திற்காக பிரசாரம் செய்து வருகிறார்5ம்வகுப்பு படிக்கும் சிறுமி முத்துக்குட்டி.
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமிக்கு ஜெயலலிதா மீது அதிக பாசம் உண்டு.இதையடுத்து அதிமுகவுக்காக பிரசாரம் செய்ய முடிவெடுத்தார் இந்தச் சிறுமி. இதற்கு அவரதுவீட்டினரும் சம்மதித்தனர்.
இதையடுத்து அதிமுகவினரின் துணையுடன் களம் இறங்கிய முத்துக்குட்டி, நீலமேகவர்ணத்திற்குஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது கவிதைகளும் பாடி அசத்துகிறார் அவர்.
""ஏழைகளை சிரிக்க வைக்கும் அம்மா. பார் புகழும் அம்மா. அடுத்த பாரதப் பிரதமர் நீங்கள்தான்அம்மா"" என்று பாடி அவர் வாக்கு சேகரிப்பது மக்களைக் கவர்ந்துள்ளது.
படிப்பிலும் முத்துக்குட்டி படுசுட்டியாம். கம்ப்யூட்டர் குறித்த படிப்பில் அவருக்கு அதிக ஆர்வம்உள்ளதாகக் கூறுகிறார்கள் அவருடைய பெற்றோர்.
நாளை ஜெ. தூத்துக்குடி பயணம்:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜெயலலிதா நாளை தூத்துக்குடிசெல்கிறார்.
நாளை மாலை 3 மணிக்கு தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் ஜெயலலிதா புறப்படுகிறார். மாலை 4மணியளவில் தூத்துக்குடி-வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். பின்னர்தூத்துக்குடியில் உள்ள சாரங்கதாரா தொழில் நிறுவன விருந்தினர் இல்லத்திற்குச் செல்கிறார்.
பின்னர் ஆறுமுகநேரி செல்லும் ஜெயலலிதா, அங்கு அதிமுக தேர்தல் பணிக் குழுவினருடன்ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் ஓய்வு எடுக்கும் முதல்வர் அடுத்த நாள் மாலை 4 மணிக்கு அழகாபுரத்தில் தனதுபிரசாரத்தைத் தொடங்குகிறார். 22ம் தேதி வரை அவர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications