சென்னையில் வேகமாகப் பரவும் அம்மை நோய்: டாக்டர்கள் எச்சரிக்கை
சென்னை:
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை நோய் பரவி வருகிறது.
வடசென்னைப் பகுதியில் ஆரம்பித்த தட்டம்மை நோய் தற்போது சென்னை நகரின் பல்வேறுபகுதிகளுக்கும் பரவி வருகிறது.
காற்றின் மூலம் பரவும் இந்த அம்மை நோய்க்கு இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தாம்பரத்தில் உள்ள தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் மட்டும் 222 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இது தவிர தனியார் மருத்தவமனைகளுக்கும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை அம்மை நோய் பரவி வருவதாகவும்டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டாக்டர் சி.டி. தங்கராஜ் கூறுகையில்,
அம்மை நோய் வந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரியானசிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
நோய் தாக்கியவர்களைத் தனியிடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்றவர்களுடன் பழகஅனுமதிக்கக் கூடாது. இது ஒன்று மட்டுமே அம்மை நோயிலிருந்து தப்புவதற்கு சிறந்த வழியாகும்.
அம்மை நோய் தாக்கியவர்கள் வேப்பிலைப் படுக்கையில் படுப்பது, அம்மனுக்கு நேர்ந்துகொள்வது ஆகியவற்றின் மூலம் மட்டும் குணமாகிவிட மாட்டார்கள்.
அம்மை வைரஸின் வீரியத்தைக் குறைப்பதற்கு ஏராளமான மருந்துகள் உள்ளன. அவற்றைஎடுத்துக் கொண்டால்தான் நோயின் தீவிரம் குறையும் என்று டாக்டர் தங்கராஜ் கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications