போஜ்சாலா கோவில்-கமால் மசூதியில் பூஜைக்கு அனுமதி
தர் (மத்தியப் பிரதேசம்):
அயோத்தியைப் போலவே இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களால் உரிமை கொண்டாடப்படும் போஜ்சாலா- கமால்மசூதியில் வாரந்தோறும் இந்துக்கள் பூஜை நடத்த மத்தியப் பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.
தர் பகுதியில் அமைந்துள்ள இந்த 11ம் நூற்றாண்டு வழிபாட்டுத் தலம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருதரப்பினரும் அவ்வப்போது மோதி வருகின்றனர். இதையடுத்து அந்தத் தலத்தை அரசு கையில் எடுத்து பூட்டிவைத்தது.
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் முஸ்லீம்கள் இங்கு வழிபாடு நடத்தலாம் என்றும், வசந்த் பஞ்சமி தினத்தன்றுமட்டும் இந்துக்கள் இங்கு வழிபாடு நடத்தலாம் என்றும் விதி வகுக்கப்பட்டது.
ஆனால், தினமும் தங்களை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என இரு மதத்தினரும் கோரி வந்தனர். அதைஅரசு ஏற்கவில்லை. இந் நிலையில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.கவினரும் இந்து ஜாக்ரன் மன்ச் அமைப்பினரும்இந்த வழிபாட்டுத் தலத்தை முற்றுகையிட்டு திறக்க முயன்றனர்.
ஆனால், போலீசார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இந் நிலையில் நேற்றிரவு இங்கு மதக் கலவரம்வெடித்தது. இதில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இங்கு ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தத் தலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒருமுறை பூஜை நடத்த இந்துக்களுக்கு மத்தியப்பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டது. ஆனால், இது தேசியஅகழ்வாராய்ச்சித் துறையின் கீழ் இருப்பதால் இங்கு பூஜை நடத்துவது குறித்த இறுதி முடிவை மத்திய அரசு தான்எடுக்க வேண்டும்.
இதற்கிடையே இன்று காலை பெண்கள் மட்டும் வெளியில் வர அனுமதி தந்து ஊரடங்கு உத்தரவு 1 மணிநேரத்துக்குத் தளர்த்தப்பட்டது. பின்னர் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்சல் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இப்பிரச்சனையை இத்தனை வருடங்கள் கழித்து பா.ஜ.க. இப்போது கிளப்புவதாக ஆளும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications