சாத்தான்குளம் பயோ- டேட்டா
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் களம் இந்தியா முழுவதிலும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவுக்குபரபரப்பான தொகுதியாகி விட்டது.
சாத்தான்குளம் தொகுதி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:
- இதுவரை இத்தொகுதியில் 11 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் 4 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. பிற கட்சிகள் மற்ற தேர்தல்களில் வென்றுள்ளன. ஆனால் இதுவரை ஒருமுறை கூட அதிமுக இங்கு வென்றதில்லை. இதுவரை அதிமுக இங்கு போட்டியிட்டதில்லை என்பதும் ஒரு காரணம்.
- எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெ. அணி, ஜா. அணி என இரண்டாக அதிமுக பிரிந்திருந்தபோது நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி இங்கு சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.
- இத்தொகுதியில் உள்ள வாக்காளர்களில் சுமார் 80,000 பேர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் பாதிப் பேர் கிறிஸ்தவ நாடார்கள். ஆனால் வேட்பாளர் என்று வரும்போது அவரை நாடாராக மட்டுமே இந்தத் தொகுதி மக்கள் பார்ப்பதால் மதப் பிரச்சினை இதுவரை வந்ததில்லை. நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதுவரை இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கடந்த முறை எம்.எல்.ஏவாக இருந்த மணி நாடார் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல, வெளியூர்க்காரர். ஆனால் இம்முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மகேந்திரன், அதிமுக சார்பில் போட்டியிடும் நீலமேகவர்ணம் ஆகிய இருவருமே உள்ளூர்க்காரர்கள்தான். இதனால் போட்டி கடுமையாகியுள்ளது.
- கிறிஸ்தவ பேராலயங்களில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடுமாறு மறைமுகமாக பிரசாரம் நடப்பதாகக் கூறப்படுகிறது.
- கடலோரக் கிராமங்கள் பலவற்றை உள்ளடக்கிய சாத்தான்குளம் தொகுதியில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாளர்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாத்தான்குளம் தேர்தலையொட்டி அங்கு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்றுஅரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் பிரச்சாரம் முடியும் 24ம் தேதி மாலை 5 மணி முதல் 26ம் தேதி மாலை 5 மணி வரையும்,பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 1ம் தேதியும் சாத்தான்குளம் தொகுதியில் உள்ளமதுக் கடைகள் மூடப்படும்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வெளியூர்களில் தங்கியிருந்தாலும், அவர்களைவாக்களிக்கச் செய்யும் வகையில் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவேண்டும். தவறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு நடைபெறும் 26ம் தேதியன்று சாத்தான்குளம் தொகுதியில் உள்ளூர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
மேலும் ஒரு பார்வையாளர் நியமனம்:
இந்நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்காக மேலும் ஒரு மத்திய தேர்தல் பார்வையாளர்நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள வருமான வரித் துறை துணை ஆணையரான அஜய்குமார்தான் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளராவார்.
வேட்பாளர்களின் தேர்தல் கணக்குகளைச் சரிபார்க்கும் பணி இவரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகதூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியும், அம்மாவட்ட கலெக்டருமான தியாகராஜன்நிருபர்களிடம் கூறினார்.
-->
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications