எதிர்க் கட்சியினர் வெளியேற்றம்: அதிமுகவினருக்கு ராஜ உபச்சாரம்
திருநெல்வேலி:
தேர்தல் கமிஷனன் உத்தரவையடுத்து சாத்தான்குளத்தில் இருந்து வெளியூர்காரர்களை வெளியேற்றிவரும் போலீசார் எதிர்க் கட்சியினரை மட்டும் வெளியேற்றிவிட்டு அதிமுகவினரைதொகுதிக்குள்ளேயே விட்டு வைத்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன்ஆகியோரை இன்று போலீசார் தொகுதியைவிட்டு வெளியேற உத்தரவிட்டனர். இதையடுத்துஅவர்கள் தூத்துக்குடிக்குச் சென்றனர். பின்னர் திருநெல்வேலி சென்றுவிட்டனர்.
இதே போல பிரச்சாரத்துக்கு வந்த வெளியூர்களைச் சேர்ந்த திமுக, மதிமுக, காங்கிரஸ்தொண்டர்களையும் அடையாளம் கண்டு போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.
ஆனால், சாத்தான்குளத்தில் முகாமிட்டுள்ள அதிமுக அமைச்சர்களையும் அதிமுகவினரையும்போலீசார் வெளியேற்றவில்லை.
இதையடுத்து அதிமுகவினரை வெளியேற்றாவிட்டால் நாங்கள் மீண்டும் சாத்தான்குளத்திற்குவருவோம் என இளங்கோவனும் சோ.பாவும் மிரட்டியுள்ளனர். இதனால் அமைச்சர்கள் மட்டும்இன்று வெளியேறுவர் என்று தெரிகிறது. ஆனால், தொண்டர்களும், வெளியூர்களில் இருந்துஅழைத்து வரப்பட்ட குண்டர்களும் போலீஸ் உதவியுடன் அங்கேயே தங்கியிருப்பர் என்றுதெரிகிறது.
சாத்தான்குளம் தொகுதியில் வெளியூர் நபர்கள் அனைவரையும் வெளியேற்றி, தொகுதிமுழுவதையும் சீலிட வேண்டும் என்று தமிழக தேர்தல் கமிஷனுக்கு தலைமைத் தேர்தல் கமிஷன்நேற்று உத்தரவிட்டது.
தேர்தல் கமிஷனருக்கு தந்தி:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியைச் சேர்ந்த வெளியூர்க்காரர்களை மட்டும் குறிவைத்து போலீசார் வெளியேற்றி வருவதாகவும், அதிமுக அமைச்சர்களுக்குராஜ உபச்சாரம் நடப்பதாகவும் கூறி தேர்தல் கமிஷனருக்கு காங்கிரஸ் தந்தி அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளரான பீட்டர் அல்போன்ஸ் திருநெல்வேலியில்நிருபர்களிடம் கூறுகையில்,
தேர்தல் கமிஷனின் உத்தரவை மதித்து வெளியூர்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும்,பிரமுகர்களும், தொண்டர்களும் சாத்தான்குளத்தை விட்டு வெளியேறி விட்டனர்.
இதையடுத்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர்களை மாவட்டத்தைவிட்டே வெளியேற வேண்டும் என்று போலீசார் கட்டாயப்படுத்தியனர். என்னையும்மாவட்டத்திற்குள்ளே வரக் கூடாது என்று விரட்டி விட்டனர்.
ஆனால் அதிமுக அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், நயினார்நாகேந்திரன், வளர்மதி, மில்லர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்தவெளியூர் பிரமுகர்கள், தொண்டர்கள் யாரையும் வெளியேற்ற போலீசார் நடவடிக்கைஎடுக்கவில்லை.
அதற்குப் பதிலாக அவர்களுக்கு அங்கே ராஜ உபச்சாரம் நடந்து வருகிறது. தேர்தல் கமிஷனின் விதிஎங்களைப் போன்ற எதிர்க் கட்சிகளுக்கு மட்டும்தானா?
அதிமுக வேட்பாளரின் ஏஜென்ட்தான் அனிதா ராதாகிருஷ்ணன் என்கிறார்கள். சட்டப்படி ஒருஅமைச்சர் தேர்தல் ஏஜென்டாக இருப்பது தவறானது. தேர்தல் விதிப்படி இது விதிமுறை மீறலாகும்என்றார் பீட்டர்.
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணுவும் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக பேக்ஸ்ஒன்றை அனுப்பியுள்ளார்.
மதுரையில் 25 காங்கிரசார் கைது:
இதற்கிடையே சாத்தான்குளத்தை விட்டு வெளியூர் அதிமுகவினரும் வெளியேற வேண்டும் என்றுகோரி மதுரையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பீதி கலந்த அமைதி:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் வந்து குவிந்துள்ள வெளியூர் நபர்களையும், ரெளடிகளையும்தொகுதியை விட்டு வெளியேற்றும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர்.
போலீசார் வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு மைக் மூலம் "வெளியூர்க் காரர்கள்அனைவரும் வெளியேற வேண்டும்" என்று கூறிக் கொண்டே ரோந்து சுற்றி வந்தனர்.
இருந்தாலும் அவ்வூரில் உள்ள பல திருமண மண்டபங்களில் இன்னும் ஏராளமான வெளியூர்க்காரர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் தேர்தலன்று வன்முறையில் ஈடுபடலாம் என்று தாங்கள்அஞ்சுவதாகவும் சாத்தான்குளம் மக்கள் தெரிவித்தனர்.
அவர்கள் பயப்படுவது போலவே வெளியூரிலிருந்து அதிமுகவினரால் கொண்டுவரப்பட்டரெளடிகள் அடிக்கடி தங்கள் இடத்தை மாற்றிக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரைதங்கியிருந்த வீடுகளை விட்டு வெளியேறி, அதிமுக பிரமுகர்களின் வீடுகளில் அவர்கள்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக பிரமுகர்களின் வீட்டில் உள்ள வெளியூர்க் காரர்களை வெளியேற்ற போலீசார்தயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. காங்கிரஸ்காரர்கள் மற்றும் எதிர்க் கட்சியினரைமட்டுமே குறி வைத்து வெளியேற்றிக் கொண்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications