வீரப்பனால் ஆபத்தாம்.. கூடுதல் பாதுகாப்பு கேட்கிறார் வாட்டாள்
பெங்களூர்:
கன்னட சங்கத் தலைவரும் தமிழர்களை எப்போதும் எதிர்த்து வருபவருமான வாட்டாள் நாகராஜை, வீரப்பன்கடத்தத் திட்டமிட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதையடுத்து வாட்டாள் நாகராஜூக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான நாராயணகுமார் நிருபர்களிடம் கூறுகையில்,
வாட்டாள் நாகராஜின் பண்ணை வீடு சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ளது. அந்த பண்ணை அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தான் வீரப்பன் கும்பல் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வீட்டின் முன் அடிக்கடி ஒரு கார் வந்து நிற்கிறது. வாட்டாளின் நடவடிக்கைள், அவர் வந்து போகும் நாள்,நேரத்தை அந்த காரில் வந்தவர்கள் நோட்டம் இட்டுச் சென்றுள்ளனர். மேலும் வாட்டாளின் வீட்டில்பாதுகாப்புக்கு இருந்தவர்களையும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
வீரப்பனின் கடத்தல் பட்டியலில் வாட்டாள் நாகராஜின் பெயரும் இருப்பதாக ரகசிய போலீஸ் அதிகாரி அரகேஷ்அரசிடம் அறிக்கை தந்துள்ளார். மேலும் வீரப்பனால் தன் உயிருக்குப் பிரச்சனை இருப்பதாக வாட்டாள் நாகராஜேபோலீசாரிடம் புகாரும் கொடுத்துள்ளார்.
இதனால் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். இப்போதுள்ள ஆயுதப் படைபோலீஸ் பாதுகாப்பு போதாது. மேலும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வீரப்பனின் மிரட்டலால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே மோதல் உருவாகிவருகிறது.
இவ்வாறு நாராயணகுமார் கூறினார்.
தமிழர்- கன்னடர் இடையே மோதலை உருவாக்கி வருபவர்களில் முக்கியமானவரே வாட்டாள் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வீரப்பன் ஒரு கரும்புள்ளி- கிருஷ்ணா:
கர்நாடகத்தின் நெற்றியில் வீரப்பன் ஒரு கரும் புள்ளி என அம் மாநில முதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
போலீசாரின் மாநாட்டில் பேசிய அவர், வீரப்பனால் கர்நாடகத்துக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் கொஞ்ச நஞ்சமல்ல.நம்மை பிற மாநிலத்தினரும் வெளி நாட்டினரும் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றனர். நமது நெற்றியில் ஒரு கரும்புள்ளியாகிவிட்ட வீரப்பனை எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்று கேட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications