விழுப்புரத்தில் ஜெ.: ரூ.236 கோடி திட்டப் பணிகள் தொடக்கம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா விழுப்புரத்தில் ரூ.236 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார். சுமார் 24,000 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இந்த மாத ஆரம்பத்தில் ஈரோடு, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலானநலத் திட்டங்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பிப்ரவரி 17ம் தேதி முதல் சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகஈடுபட்டிருந்த ஜெயலலிதா, நேற்று தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று விழுப்புரம் சென்றார்.
இதற்காக இன்று பகல் சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரத்திற்குச் சென்றார்ஜெயலலிதா. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில்கலந்து கொண்ட ஜெயலலிதா, ரூ.236 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
ரூ.58 கோடி மதிப்பீட்டிலான குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், ரூ.178 கோடிமதிப்பிலான துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பான திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.39 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்ஜெயலலிதா.
இவற்றைத் தவிர ரூ.19 கோடி மதிப்புள்ள அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை 24,000பேருக்கு முதல்வர் வழங்கினார்.
சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்கிய இவ்விழாவில் அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்த பின்னர் இன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
ஜெயாவின் தொடர் பயணங்கள்:
இந்நிலையில் மார்ச் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும்நடைபெறும் அரசு விழாக்களில் ஜெயலலிதா கலந்து கொள்ளவுள்ளார்.
மார்ச் 6ம் தேதி திண்டுக்கல், 7ம் தேதி பெரம்பலூர், 9ம் தேதி திருச்சி, 12ம் தேதி திருநெல்வேலி,13ம் தேதி தூத்துக்குடி மற்றும் 14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் செல்கிறார்ஜெயலலிதா.
அங்கு நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்டங்ளையும் அவர்தொடங்கி வைப்பார்.
இருந்தாலும், தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி இவற்றில் சில நிகழ்ச்சிகளை ஜெயலலிதாகடைசி நேரத்தில் ரத்து செய்யலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரியலூர்-பெரம்பலூர் இணைப்புக்கு எதிர்ப்பு:
இதற்கிடையே அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்கள் இணைக்கப்படுவதை எதிர்த்து மார்ச் 7ம் தேதிஜெயலலிதா பெரம்பலூர் வரும்போது போராட்டம் நடத்த அரியலூர் மாவட்ட மீட்புக் குழுவினர்முடிவுசெய்துள்ளனர்.
ஜெயலலிதா பெரம்பலூர் வரும் சமயத்தில் அரியலூர் மாவட்டத்தை மீண்டும் பெரம்பலூர்மாவட்டத்துடன் இணைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றுகூறப்படுகிறது.
இதை எதிர்த்துப் போராட அரியலூர் மாவட்ட மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பானநடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று அரியலூரில் இக்குழுவினர் ஆலோசனைநடத்தவுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications