மாறன் சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவா?- நாடாளுமன்றத்தில் அதிமுக கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் முரசொலி மாறனுக்கு மத்தியஅரசு கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வருவதாக அதிமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டியதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று திமுக எம்.பியான குப்புசாமி பேசுகையில், சாத்தான்குளத்தில்தேர்தல் விதிமுறைகளை மீறி பல செயல்கள் நடக்கின்றன என்றார்.

அப்போது வேகமாக இடைமறித்த அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியன், விதிமுறைகள் பற்றிநீங்கள் பேசக் கூடாது என்றும் அதற்கு உங்களுக்குத் தகுதியும் இல்லை என்றும் ஆவேசத்துடன்கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

முரசொலி மாறனுக்கு அமெரிக்காவில் எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது? அதுவிதிமுறைகளுக்கு உட்பட்டுதான் செய்யப்படுகிறதா?

ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அவருக்கு ஊசிகள் போடப்படுகிறதே, மத்திய அரசுசெலவழிக்கும் அந்தப் பணம் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் செலவழிக்கப்படுகிறதா?

அப்போது குறுக்கிட்ட திமுகவைச் சேர்ந்த சுகாதரத்துறை இணையமைச்சரான அமைச்சரான ராஜா,அது பற்றி நீங்கள் எப்படிப் பேசலாம் என்றார்.

ஆனால், தொடர்ந்து பேசிய பி.எச். பாண்டியன், பொதுமக்களின் வரிப் பணம்தான் மாறன்சிகிச்சைக்காக செலவழிக்கப்படுகிறது. மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தச்செலவுகள் குறித்து தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை.

சாதாரண ஏழை, எளியவர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்காக ரூ.15,000 முதல் ரூ.25,000வரை வழங்கப்படுகிறது. ஆனால் 9 சாட்டிலைட் டி.விக்களின் அதிபரான மாறன் ரூ.14 கோடி வரைவருமான வரி கட்டுகிறார். அவருக்கு கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழிக்க வேண்டியஅவசியம் என்ன?

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தபோதுதான் சிகிச்சைக்காகவெளிநாட்டிற்குச் சென்றார். ஆனால் அந்த சிகிச்சைக்குச் செலவான ரூ.1 கோடியை அதிமுகவேஏற்றுக் கொண்டது என்றார் பாண்டியன்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிமுகவினரும் பதிலுக்குக் சத்தம்போட்டனர். திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி வர முயன்றதால் நாடாளுமன்றத்தில்பெரும் அமளி ஏற்பட்டது.

அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான விஜய் கோயல் எழுந்து, மாறனுக்குச்செய்யப்படும் செலவுகள் குறித்த விவரங்கள் அடுத்த இரண்டு நாட்களில் நாடாளுமன்றத்தில்தெரிவிக்கப்படும் என்றார். இதையடுத்து அனைத்து எம்.பிக்களும் அமைதியானார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+