""எதிர்க் கட்சிகள் கெளரவர்கள் மாதிரி"": ஜெயலலிதா கடும் தாக்கு
விழுப்புரம்:
மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களைப் போல் தான் தனித்துப் போராடி வருவதாகவும்,கெளரவர்களைப் போல எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு தன்னை எதிர்த்துவருவதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நேற்று விழுப்புரம் சென்ற ஜெயலலிதா, அங்கு பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.சபாநாயகர் காளிமுத்து தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,
மகாபாரதக் கதை ஒன்றுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அதில் நல்லவர்களாக வரும்பாண்டவர்கள் ஐந்து பேர்தான். ஆனால் கெட்டவர்களாக வரும் கெளரவர்களோ 100 பேர்.
பாண்டவர்களின் நிலையில் நான் உள்ளேன். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டுகெளரவர்களைப் போல எதிர்த்து வருகின்றன. நல்லவர்களை விட கெட்டவர்களே அதிகம்இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருவான துரோணச்சார்யா, தனது சிஷ்யர்களின் அறிவைசோதிப்பதற்காக ஒரு போட்டி நடத்துவார். ஒரு காலி வீட்டைக் காட்டி, தனி மனிதனாக யாருடையஉதவியும் இல்லாமல் அந்த வீட்டை நிறைக்க வேண்டும் என்று கூறுவார் துரோணர்.
இதைத் தொடர்ந்து துரியோதனன் மிகவும் கஷ்டப்பட்டு வைக்கோல், குப்பைகளைப் போட்டு அந்தவீட்டை நிறைத்து விடுவான். ஆனால் தர்மனோ ஒரு குத்து விளக்கை அந்த வீட்டில் ஏற்றிவைப்பான். தர்மனின் அறிவைப் பாராட்டுவார் துரோணர்.
இதில் காலி வீடாக வருவதை தமிழ்நாடாகவும், தர்மனாக என்னையும், குப்பையைக் கொட்டும்துரியோதனனாக எதிர்க் கட்சிகளையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
மகாபாரதத்தில் வருவது போல இறுதியில் வெற்றி பாண்டவர்களுக்குத்தான். அதாவது எனக்குத்தான்வெற்றி கிடைக்கும். எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் சரி, எத்தகைய அணி அமைத்தாலும் சரி.தோல்வியடையப் போவது கெளரவர்களாகிய எதிர்க் கட்சிகள்தான் என்றார் ஜெயலலிதா.
நிகழ்ச்சியில் பெண்கள் சுய உதவிக் குழுக்களின் சேவையைப் பாராட்டிய ஜெயலலிதா, தனதுஆட்சிக் காலத்தின்போது துவக்கப்பட்ட இந்தப் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் இன்று ஆல் போல்தழைத்து வேரூன்றி வளர்ந்திருப்பதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்றார் ஜெயலலிதா.
விழா பந்தலில் தீ:
இதற்கிடையே விழுப்புரம் அரசு விழாவை முடித்துக் கொண்டு ஜெயலலிதா சென்னை திரும்பியபின்னர், விழா நடந்த அரசுப் பந்தலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
விழா பந்தலைப் பிரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில்சுமார் ரூ.30,000 மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாகவே தீ விபத்துஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications