பொன்முடி திடீர் கைது: விழுப்புரத்தில் வன்முறை
விழுப்புரம்:
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை அவரது வீட்டுக்குள் புகுந்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் திமுகவினர் சாலைமறியலிலும் கல்வீச்சிலும் ஈடுபட்டுள்ளதால்போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நேற்று விழுப்புரத்தில் அரசு விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பல கோடிமதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.
இந்த விழாவையொட்டி விழுப்புரம் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான அதிமுக கொடிகளும், பேனர்களும்கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அரசு விழாவை எப்படி அதிமுக விழாவாக மாற்றலாம் என்று கேட்டு பொன்முடிதலைமையிலான திமுகவினர் மாவட்ட ஆட்சித் தலைவர்முகம்மது அஸ்லமை முற்றுகையிட்டனர். கொடிகளைஅகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது தான் வழக்குப் போடுவோம் என்று கூறினர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி விழா மேடை அருகே இருந்த கட்அவுட்கள்,வரவேற்புத் தோரணங்கள், அதிமுக கொடிகளை அதிகாரிகள் அகற்றினர்.
இதையடுத்து அதிமுக கொடிகளை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சில அதிகாரிகளை அதிமுகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தாக்கப்பட்ட அதிகாரிகள்போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆனால், முதல்வர் விழுப்புரத்தில் இருந்ததால் பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என மூத்த அதிகாரிகள்கேட்டுக் கொண்டதையடுத்து அத்தோடு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதையடுத்து அதிமுகவினர் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தினர். மேலும் பொன்முடியின் காரை உடைத்தனர்.அவருக்குச் சொந்தமான ஏர்செல் செல்போன் நிறுவன ஏஜென்சியையும் தாக்கினர். இதையடுத்து பொன்முடியின்வீட்டில் அவரது பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான திமுகவினர் நேற்று காலையில் இருந்து தங்கியுள்ளனர்.பொன்முடியின் மீதான தாக்குதலைக் கண்டித்து திமுகவினர் பல இடங்களில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
இந் நிலையில் இன்று காலை பொன்முடியின் வீட்டுக்கு 3 வேன்களில் போலீசார் வந்தனர். பொன்முடியைக் கைதுசெய்வதாகக் கூறி உள்ளே நுழைந்தனர். ஆனால், பொன்முடி கைதாக மறுத்தார்.
அதற்குள் தகவல் பரவிவிடவே ஆயிரக்கணக்கான திமுகவினர் பொன்முடி வீட்டில் குவிந்தனர். அங்குபோலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நிலைமை மோசமாவே போலீசார் பொன்முடியைக்கைது செய்து குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் போட்டனர். இதைத் தடுக்க முயன்ற திமுகவினரைபோலீசார் தாக்கினர்.
நேராக விழுப்புரம் தாலுகா அலுவலக காவல் நிலையத்துக்கு பொன்முடி கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவரிடம் கைது தொடர்பான ஆவணங்களில் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினர்.
இதையடுத்து அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வேனில் ஏற்ற போலீசார் முயன்றனர். ஆனால், வேனில்ஏற மறுத்த பொன்முடி நடந்தே தான் நீதிமன்றத்துக்கு வருவேன் என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.
பொன்முடியைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் சாலையில் கூடி நடக்க ஆரம்பிக்கவேபெரும் பதற்றம் உருவானது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் பொன்முடி கைது செய்யப்பட்ட தகவல் பரவியவுடன் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் திமுகவினர்ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும்வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
பல இடங்களில் திமுகவினர் கல்வீச்சிலும் ஈடுபட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டம் முழுவதுமே பெரும் பரபரப்புநிலவுகிறது. இவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம்முழுவதிலும் போலீசார்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பொன்முடி மீது ஜெயலலிதாவின் கட்-அவுட்களை உடைத்ததாக ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
பொன்முடி தவிர விழுப்புரம் நகராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பல திமுகவினரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொன்முடி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்சும் இந்தக் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications