ரஷ்யாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அமோக வரவேற்பு
மாஸ்கோ:
இந்தியாவின் பாரம்பரியம் மிக்க ஆயுர்வேத சிகிச்சை முறை மூலம் பல்லாயிரக்கணக்கானரஷ்யர்கள் தங்கள் நோய்களைக் குணப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பல்வேறு மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்துகள் தங்களை நீண்ட காலத்திற்கு வாழவைத்துக் கொண்டிருப்பதையும் ரஷ்ய மக்கள் உணர்ந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சைபீரியாவைச் சேர்ந்த விக்டோரியா ரெய்ஸ்விக்என்ற 20 வயதுப் பெண் ஆயுர்வேதத்தின் மகத்துவத்தை உணர்ந்து தன் உறவினர்கள் மற்றும்நண்பர்களிடையே அதைப் பரப்பினார்.
இதையடுத்து ஏராளமான ரஷ்யர்கள் ஆயுர்வேத சிகிச்சை முறைகளையே கடைப்பிடிக்கத்தொடங்கினர். மேலும் தங்களுக்கு நோய்களே இல்லாவிட்டாலும் மூலிகைகள் நிரம்பிய ஆயுர்வேதமருந்துகளும், டானிக்குகளும் தங்களை மிகவும் நல்ல உடல் நலத்துடன் வைத்திருப்பதை அவர்கள்உணர்ந்துள்ளனர்.
"சயவன்பிராஷ்" என்று நம் ஊர்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஆயுர்வேத மருந்துரஷ்யாவில் தற்போது அமோகமாக விற்பனையாகி வருகிறது. உடல் எடை குறைவதைத்தடுப்பதிலிருந்து பல உடல் உபாதைகளை இந்த மருந்து நீக்கிக் கொண்டிருப்பதாக பல ரஷ்யர்களும்தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற ஆயுர்வேத மருந்துகளின் விற்பனை ரஷ்யாவில் தற்போது முழு அளவில்சூடுபிடித்துள்ளது. ஒருவர் தன்னுடைய மொழிபெயர்ப்பாளர் பதவியையே ராஜினாமாசெய்துவிட்டு ஆயுர்வேத மருந்துகளை விற்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.அந்த அளவுக்கு இந்த விற்பனை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
விளாடிவாஸ்டாக் நகரில் மட்டும் 35,000க்கும் அதிகமான மக்கள் ஆயுர்வேத மருந்துகள்விற்பனையை மிகவும் சுறுசுறுப்பாக நடத்தி வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான மருத்துவமாணவர்களும் ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான பாடங்களைக் கற்று வருகின்றனர்.
ஆனாலும் ரஷ்யாவில் ஆயுர்வேத சிகிச்சை முறைகளோ, மருந்துப் பொருள்களோ இன்னும்அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications