"சார்ஸ்" நோய் அபாயம்: சென்னை வந்த கனடா கப்பல் பாதி வழியில் நிறுத்தம்
சென்னை:
தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் "சார்ஸ்" நோய் தொற்றும் அபாயம் காரணமாககனடா நாட்டுக் கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்திற்கு 3 கி.மீ. தொலைவிலேயே நிறுத்தப்பட்டது.
சீனாவில் தோன்றியதாகக் கருதப்படும் "சார்ஸ்" நோயால் அந்நாடு, சிங்கப்பூர், கனடா உள்ளிட்டநாடுகளில் சுமார் 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
"சார்ஸ்" நோய் பரவி விடாத வகையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்கள், கப்பல்களில் உள்ளபயணிகள் அனைவரும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு கனடாவைச் சேர்ந்த "சீலிங்" என்ற பிரம்மாண்டமானசுற்றுலாக் கப்பல் வந்தது.
சிங்கப்பூர் வழியாக வந்ததால் இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு 3 கி.மீ. தொலைவிலேயேநடுக்கடலில் நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து தனிப் படகுகள் மூலம் அந்தக் கப்பலுக்குச் சென்றசிறப்பு டாக்டர்கள் அதிலிருந்த பயணிகளைப் பரிசோதித்தனர்.
கப்பலில் இருந்த சுமார் 1,000 பேரும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாகினர். ஆனால்யாரும் "சார்ஸ்" நோயால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இது நன்கு உறுதி செய்யப்பட்ட பின்னரேசீலிங்" கப்பல் சென்னை துறைமுகத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது.
இதேபோல் சென்னை துறைமுகத்திற்கு வரும் மற்ற கப்பல்களில் உள்ள பயணிகள் மற்றும்ஊழியர்களையும் நன்றாக மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் உள்ளே வரஅனுமதிக்கப்படுவார்கள் என்று துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் பாஸ்கரதாஸ்தெரிவித்துள்ளார்.
அரசு தீவிர நடவடிக்கை:
இதற்கிடையே "சார்ஸ்" நோய் பரவி விடாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுமருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
"சார்ஸ்" நோயால் பாதிக்கப்பட்டு யாரும் வந்தால் அவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதுமுதல் அவர்களிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவி விடாமல் எவ்வாறு பாதுகாப்பது என்பதுவரை அனைத்து வகையான பயிற்சிகளும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு அளிக்கப்படுகின்றன.
வியாபார விஷயமாக அடிக்கடி சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் சென்று திரும்பும் தமிழகமக்களுக்கு "சார்ஸ்" நோய் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
"சார்ஸ்" நோய்க்கு 75 பேர் பலி:
இந்நிலையில் "சார்ஸ்" நோயால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75ஆகஉயர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் சுமார் 1,800 பேர் இந்த நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications