மார்க்சியம் குறித்து கிண்டல்: ஜெ. மன்னிப்பு கேட்க கம்யூனிஸ்ட்கள் கோரிக்கை
சென்னை:
மேற்கு வங்கத்தில் நடந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வாய்க்கு வந்தபடி விமர்சித்த முதல்வர்ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டசபையில் கோரிக்கைவிடுத்தன.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஜெயலலிதா மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்தார். இதையடுத்து இக் கட்சிகளின் உறுப்பினர்கள்இன்று சட்டமன்றத்தில் அதிமுக அரசை எதிர்த்து கோஷம் எழுப்பினர். ஆனால், அவர்களை உடனே வெளியேறுமாறு சபாநாயகர்காளிமுத்து உத்தரவிட்டார்.
நேற்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, மார்க்ஸ் சித்தாந்தையே கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசி வருவதால் கம்யூனிஸ்ட் இயக்கங்கள்மக்களுக்குப் பயன்படாமல் போய்விட்டன. அவர்கள் எப்போதும் இரண்டை மட்டுமே செய்கிறார்கள்.
ஒன்று, எங்கேயாவது எதையாவது கேட்டு போராட்டம் நடத்துவது. இல்லாவிட்டால் பொலிட்பீரோ கூட்டம், எக்ஸிகியூட்டிவ் கமிட்டிமீட்டிங் என்று போட்டு 4,5 நாட்கள் சும்மா வெட்டியாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள். இது தான் கம்யூனிஸ்ட்கள்.
இதைத் தவிர ஆக்கப்பூர்வமான வேலை எதையும் செய்வது இல்லை (ராணி மேரி கல்லூரியை இடிப்பது போன்ற ஆக்கப்பூர்வமானவேலையா?) என்றார் ஜெயலலிதா. மேலும் மேற்கு வங்கத்தில் நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியையும் விமர்சித்தார்.
இந்தப் பிரச்சனை இன்று சட்டமன்றத்தில் வெடித்தது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் இன்றுசட்டமன்றத்தில் ஜெயலலிதாவையும் அரசையும் எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
மக்களுக்காகப் போராடும் எங்கள் கட்சியையும் மேற்கு வங்கத்தில் நடக்கும் எங்கள் ஆட்சியையும் தவறாகப் பேசிய ஜெயலலிதா அதைத்திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மேற்கு வங்க ஆட்சி குறித்து நான் தவறாக ஏதும் பேசவில்லை. அதே நேரம் கம்யூனிஸ்ட்கள் குறித்த எனது கருத்தில் எந்தமாற்றமும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதையடுத்து அதிமுகவைக் கண்டித்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களும் கோஷம் போட்டனர். அப்போது தலையிட்டசபாநாயகர் காளிமுத்து அவைக்குள் கோஷம் போட அனுமதிக்க முடியாது. உடனே நீங்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள் நிருபர்களிடம் பேசுகையில், தமிழக அரசிடம்இடிக்கிற போக்கு (கல்லூரி இடிப்பு) அதிகரித்துவிட்டது. பிற மாநில அரசை விமர்சிப்பது போன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்தைவிளைவிக்கும் செயலில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். இதைத் தட்டிக் கேட்டால் வெளியே போகச் சொல்கிறார்கள். இது இந்த அரசுக்குநல்லதல்ல என்றனர்.
இன்று முழுவதும் அவைக்குச் செல்ல மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications