சிறையில் அடைப்பேன்- ஜெ மிரட்டல்: ஆனாலும் அரசு ஊழியர் போராட்டம் நிச்சயம்
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும்நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் செய்வோம் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட போனஸ் மற்றும் பிற சலுகைகளைத் திருப்பித் தரக் கோரி அரசு ஊழியர்கள் தொடர்போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து அரசு ஊழியர் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சு நடத்த முன்வந்தது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணனுடன் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அரசுஊழியர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டியோஜியோ) ஆகிய இரு முக்கிய சங்கங்களின்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன. இதையடுத்து நாளை (10ம் தேதி) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம்போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஜூன் மாதம் 4ம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை:
ஆனால், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசுஎச்சரித்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் அரசுத் துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது.
வேலை நிறுத்தம் செய்தால் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். ஊதியமும் தரப்படமாட்டாது.
போராட்டக் காலத்தில் எந்தவிதமான விடுமுறையும் அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. இந்த நேரத்தில் விடுமுறை எடுத்தால் சம்பளம்கிடைக்காது. திடீர் விடுமுறை எடுப்பவர்கள் குறித்து அந்ததந்த துறையின் செயலாளர்களுக்கு அதிகாரிகள் தகவல் அனுப்ப வேண்டும்.
நாளை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதைத் தடுக்கவே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
அரசு ஊழியர்கள் திட்டவட்டம்
ஆனால், திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் செய்வோம் என அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்களை அடக்கி, ஒடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications