சார்ஸ் பயம்: ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து
மும்பை:
சார்ஸ் நோய் பாதித்த நாடுகளுக்கு விமானங்களை இயக்க ஏர்-இந்தியா நிறுவன பைலட்கள் மறுத்து வருகின்றனர். இதனால் ஹாங்காங்உள்ளிட்ட சில நாடுகளுக்கு இந்திய விமான சேவைகள் குறைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே இந்த நோய் பயம் காரணமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து பிற நாடுகளுக்கு வரும்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் விமானங்கள் பெரும்பாலும் காலியாகவே பறந்து கொண்டுள்ளன.
இந் நிலையில் நோய் பாதிப்பு உள்ள ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமானங்களை இயக்க பைலட்களும் மறுத்து வருகின்றனர்.இதனால், நாளை மறுநாள் முதல் (11ம் தேதி முதல்) ஹாங்காங்குக்கு வாரத்துக்கு இரு விமானஙகள் மட்டுமே இயக்கப்படும் என ஏர்இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவில் சார்ஸ் இல்லை:
இதற்கிடையே இந்தியாவில் சார்ஸ் பாதிப்பு இல்லை என மத்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று நாடாளுமன்றத்தில்அறிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் சார்ஸ் நோயால் தாக்கப்பட்டதாக வந்த தகவலும், மும்பை வந்திறங்கிய அமெரிக்க பெண் பயணிஒருவருக்கு சார்ஸ் நோய் தாக்குதல் இருந்ததாக வந்த தகவலும் தவறானவை என்று சுஷ்மா கூறினார்.
அதே நேரத்தில் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் வந்திறங்கும் அனைத்துப் பயணிகளும் சார்ஸ் சோதனைகளுக்குஉட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு மையமும் டெல்லியில் உள்ள தொற்றுநோய்ஆராய்ச்சி தேசிய மையமும் சார்ஸ் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.
கரப்பான் பூச்சிகள் காரணமா?
இதற்கிடையே சார்ஸ் நோயைப் பரப்புவதில் கரப்பான் பூச்சிகளுக்கும் பெரும் பங்கு இருக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்கூறியுள்ளனர்.
சீனாவுக்கு கண்டனம்:
சார்ஸ் நோய்த் தாக்குதல் முதலில் சீனாவில் தான் ஆரம்பித்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த நோய் தாக்குதல் தொடங்கி பல மாதங்கள் வரைஅதை சீனா வெளியுலகுக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டதாகவும் இதனால் தான் இப்போது பிரச்சனை இவ்வளவு தூரம்சிக்கலாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications