மதுரையில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இரு பெண்கள் படுகொலை
மதுரை:
மதுரை அண்ணாநகர் பகுதியில் இரு பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்னொருவர் திருமணமானவர். இவர் வீட்டில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்களால் மதுரையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இலங்கை பெண்:
இலங்கை-திரிகோணமலையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் மயூரணி. இவர்மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பு படித்துவந்தார்.
இந்தக் கல்லூரி மதுரையில் பிரபல தொழிலதிபர் சோலைமலைத் தேவருக்குச் சொந்தமானது.ஆரம்பத்தில் கல்லூரியில் உள்ள விடுதியிலேயே அவர் தங்கி இருந்தார். ஆனால் கடந்த 6மாதங்களுக்கு முன் விடுதியிலிருந்து வெளியேறி அண்ணா நகரில் உள்ள தன் சோலைமலைத்தேவரின் வீட்டு மாடியிலேயே தங்கினார் இருந்து படித்து வந்தார்.
மயூரணியின் தந்தையும் சோலைமலைத் தேவரும் நண்பர்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மயூரணியின் அறை பூட்டியே கிடந்தது. நேற்று அவரதுஅறையில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்து. பூச்சிகளும் பறந்தன. இதையடுத்து அக்கம்பக்கத்தில்உள்ளவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.
அப்போது மயூரணி உடலெங்கும் ரத்தம் உறைந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். அடைகளும்அவிழ்க்கப்பட்டு அலங்கோலமாகக் கிடந்தார்.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
3 நாட்களாக சோலைமலைத் தேவர் குடும்பத்தினர் ஏன் இந்தப் பெண்ணை ஏன் தேடவே இல்லைஎன்று தெரியவில்லை. இதனால் அந்தக் குடும்பத்தினரிடமும் விசாரணை நடக்கும் என்றுதெரிகிறது.
தொழிலதிபர் வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள் தனியே மாடி அறையில் இந்தப் பெண்ணைக்கற்பழித்துக் கொலை செய்திருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பெண் கழுத்தை அறுத்துக் கொலை:
மயூரணியின் கொலைச் சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியே அதே நேரத்தில் இன்னொருகொலையும் அதே பகுதியில் நடந்துள்ளது.
அண்ணாநகர் கிழக்குக் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைவைத்துள்ளார். இரு மாதங்களுக்கு முன் தான் இவருக்கும் வாணி (29) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இந் நிலையில் படுக்கை அறையில் வாணி ரத்த வெளத்தில் கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். வீட்டில் நகைகள், பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. அவரது தலைமுடியில் ஒருகைக்கடிகாரம் சிக்கியிருந்தது. இது வினோத்குமாருடையது என்று தெரிகிறது.
அவரை கணவரே கொலை செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications