புஷ் பாதுகாப்பு ஆலோசகர்- பிரிஜேஷ் மிஸ்ரா சந்திப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இன்று இந்தியா வருகிறார்.
அதே நேரத்தில் பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின்பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரைஸ்ஸை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலையும் மிஸ்ரா சந்தித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இந்தச் சந்திப்பு பெரும்முக்கியத்துவம் பெற்றுள்ளன.
காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தினால் தான் பேச்சு நடத்துவோம் என்று கூறி வந்த இந்தியா, இப்போதுகாஷ்மீர் பிரச்சனையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வர்த்தக, பொருளாதார உறவுகள் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முன்வந்துள்ளது.
இதற்கு பாகிஸ்தானும் தயாராக உள்ளது. இந் நிலையில் தீவிரவாதிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தி இந்தியாவுடன் உறவை சீராக்குமாறுபாகிஸ்தானை அமெரிக்கா நெருக்கி வருகிறது.
பாகிஸ்தானில் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், பிரதமர் மிர் ஜமாலி ஆகியோருடன் பேச்சு நடத்திய ஆர்மிடேஜ்இதனை வலியுறுத்தினார். அப்போது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாம்கள் எதுவும் இல்லை எனமுஷாரப் மறுத்தார்.
அப்படியே முகாம்கள் ஏதாவது இருந்தாலும் அவை உடனே மூடப்படும் என்று முஷாரப் தன்னிடம் உறுதிமொழி தந்துள்ளதாக ஆர்மிடேஜ்தெரிவித்தார். அவர் இன்று இந்தியா வருகிறார்.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் ஆகியேரைை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
இதற்கிடையே தெற்காசியாவை அணு ஆயுதமே இல்லாத பகுதியாக மாற்றலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்தியாநிராகரித்துவிட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இந்தியாவுக்காகத்தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், இந்தியாவின் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கபடவில்லை. இந்தியாவுக்கு இந்தப் பகுதியில்உள்ள வேறு சில நாடுகளாலும் (சீனா) பிரச்சனை உள்ளது. அவர்களுக்கும் சேர்த்துத் தான் இந்தியா தனது அணு ஆயுத திட்டத்தைஉருவாக்கியது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications