பிரதமரின் கார் வரிசையில் புகுந்த யமஹா: 3 வாலிபர்கள் கைது
டெல்லி:
பிரதமரின் கார் வரிசைக்குள் திடீரென மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதையடுத்து அதில் பயணம் செய்த 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 10 மணிக்கு வாஜ்பாய் கான் மார்க்கெட் பகுதியில் உள்ள பல் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு ரேஸ் கோர்ஸ்ரோட்டில் உள்ள தனது அரசு இல்லத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரது கார் வரிசை செல்லும் பாதையில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஆனால், சுப்பிரமணிய பாரதி மார்க் அருகே பிரதமரின் கார் வரிசை சென்ற போது ஒரு யமஹா மோட்டார் சைக்கிள் கார் வரிசையைநோக்கி வந்தது. அங்கு பாதுகாப்பில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் இடையில் புகுந்து அந்த யமஹாவைத் தடுத்தார். ஆனால்,அவரை இடித்துத் தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிள் மிக வேகமாக கார் வரிசையில் புகுந்தது.
இதையடுத்து பிரதமரின் காரும் உடன் வந்த பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டன. ஒரு பிரிவு கமாண்டோக்கள் பிரதமரின் காரை சுற்றிபாதுகாப்பு அரண் அமைத்தனர்.
மற்ற கமாண்டோக்கள் இரு பிரிவாகப் பிரிந்து அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்தனர். அவர்களைக்கைது செய்த உளவுப் பிரிவு போலீசார் உடனே ஒரு காரில் இழுத்துப் போட்டுக் கொண்டு இன்டலிஜென்ஸ் பீரோ தலைமைஅலுவலகத்துக்குச் சென்றனர்.
பின்னர் வாஜ்பாயின் கார் வரிசை மீண்டும் புறப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.அவர்களது பெயர் ரிங்கு, ரவி, கிஷன் என்று தெரியவந்தது. ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மிக வேகமாக சென்றபோது தெரியாமல் உள்ளேபுகுந்துவிட்டதாக அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவே ஐ.பி மற்றும் கமாண்டோப் படை அதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடந்தது. அதில் பிரதமரின் பாதுகாப்புகுறித்து விலாவாரியாக விவாதிக்கப்பட்டத.
கடந்த ஓராண்டில் பிரதமரின் கார் வரிசைக்குள் இவ்வாறு ஊடுருவல் நடப்பது இது 4வது முறையாகும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications