கொலை மிரட்டல்: சென்னை வந்தது அழகிரி குடும்பம்?
சென்னை:
கொலை மிரட்டல் வர ஆரம்பித்துள்ளதையடுத்து மு.க.அழகிரியின் குடும்பம் சென்னைக்குவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகமு.க.அழகிரி கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு கொலைமிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன. இதனால் அவரது வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பைப்பலப்படுத்தினர்.
ஆனாலும் இதையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருப்பதால் பதற்றம் தணியும் வரைஅழகிரி தனது குடும்பத்தினரை சென்னையில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகத்தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் மதுரையில் இருந்து சென்னை வந்துவிட்டனர். ஆனால், சென்னையில் எங்குதங்கியுள்ளனர் என்று தெரியவில்லை.
கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் அவர்கள் தங்கவில்லை.
அழகிரியுடன் குடும்பத்தினர் சந்திப்பு:
முன்னதாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியை அவரது குடும்பத்தினர் நேற்று மாலை சந்தித்தனர்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரிக்கு முதல் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அழகிரியின் மனைவி காந்தி, மகன்கள்,கருணாநிதியின் மகளும் அழகிரியின் தங்கையுமான செல்வி, முரசொலி செல்வம் ஆகியோர் சிறையில் சென்று சந்தித்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் மதுரை திரும்பாமல் சென்னைக்குப் போய்விட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ஓ.பி.ராமன், செங்குட்டுவன் உள்ளிட்டோரும்,எம்.எல்.ஏக்களான தண்டாரம்பட்டு வேலு, அன்பில் பெரியசாமி ஆகியோரும் அழகிரியைச் சந்தித்தனர்.
மேலும் 3 அழகிரி ஆதரவாளர்கள் சரண்:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 அழகிரி ஆதரவாளர்களிடம் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகிரி ஆதரவாளர்களால் தா.கி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுவதால், இந்தக் கொலை நடந்தவுடன் 10அழகிரி ஆதரவாளர்கள் வரை கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 3 பேர்போலீசாரிடம் சரணடைந்தனர்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபி, ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயராமன், பாரக் மந்திரி எனப்படும் மந்திரிஆகியோர் போலீஸாரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்கள் 3 பேரையும் போலீஸார் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. சரணடைந்தமூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்களது வக்கீல்களுடன் திடீர்நகர் காவல் நிலையத்தில் இவர்கள் ஆஜராகினர். இதையடுத்து இவர்கள் மூவரும் தா.கி. கொலைவழக்கை விசாரித்துவரும் உதவி கமிஷனர் போசிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்தவழக்கில் மேலும் சில அழகிரி ஆதரவாளர்களும் கைதாகலாம் என போலீசார் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications