அதிக விலையில் ‘ஜனநாயகன்’ டிக்கெட்.. பகற்கொள்ளை என சாடிய வேல்முருகன்.. விஜய்யை விடாத டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''ஜனநாயகன் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது கவலையையும் ஏற்படுத்துகின்றன. இந்த கட்டணக் கொள்ளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு உடனடியாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா?, டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்'' என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், தமிழக அரசை சாடியுள்ளார்.

தமிழகத்தில் நாளை 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாக உள்ளது. முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் இதுவாகும். இதனால் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் இந்த படத்தை பார்க்க அதிக ஆர்வமாக உள்ளனர்.

Jana Nayagan

இந்நிலையில் தான் தியேட்டர்களில் வழக்கம்போல் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் கூறியுள்ளதாவது: ''நாளை வெளியாகவுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அரசால் நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை மீறி விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச் சந்தை மூலம் மக்களிடம் அதிக விலை வசூலிக்கப்படுவதாகவும் வெளியாகும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.

ஒரு திரைப்படத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை, சிலர் இலாப வேட்டைக்கான வாய்ப்பாக மாற்ற முயற்சித்தால், அது வெறும் நுகர்வோர் உரிமை மீறல் மட்டுமல்ல. சட்டத்தின் மீதான வெளிப்படையான அவமதிப்பாகும்.

தாங்கள் விரும்பும் நடிகர்களின் திரைப்படங்களைத் திரையரங்குகளில் ஆர்வத்துடன் பார்க்க வரும் இரசிகர்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி, அவர்களின் சட்டைப் பையில் இருக்கும் பணத்தைப் பகல் கொள்ளையடிப்பது போன்ற இந்தக் கட்டணக் கொள்ளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இரசிகர்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் இலாபத்திற்கானக் கருவியாக மாற்றும் இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ளத் திரையரங்குகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா?, டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், எந்த நடிகரின் திரைப்படமாக இருந்தாலும், எந்த நிறுவனத்தின் திரையரங்காக இருந்தாலும், யார் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி உரிமங்கள் இரத்து செய்யும் அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரனும் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன், ''மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும்.

எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+