தலித்துகளை ஆதி தமிழர் என்று அழைக்க வேண்டும்: சங்கராச்சாரியார்
கடலூர்:
தலித் இன மக்களை ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதிலாக ஆதி தமிழர் என்று அழைக்கலாம் என காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
தலித் என்ற அடைமொழியுடன் வரும் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பேசிசமீபத்தில் சங்கராச்சாரியார் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அவருக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அதே போல ஆதி திராவிடர் என்றும் குறிப்பிடக் கூடாது என்றார். இந் நிலையில் ஆதி தமிழர் என்று பெயர்சூட்டியுள்ளார் சங்கராச்சாரியார்.
கடலூரில் மக்கள் குடியரசுக் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுசங்கராச்சாரியார் பேசுகையில்,
தலித்துகளை ஹரிஜன் என்று அழைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். ஹரிஜன் என்ற வார்த்தைக்குப்பதில் ஆதி தமிழர் என்று அழைக்க வேண்டும். அதுதான் சரியான சொல்லாக இருக்க டியும்.
கடவுளுக்கு முன் அனைவரும் ஒன்றே. யாரும், யாரையும் அடிமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. தலித் மக்களின்சமூக மேம்பாட்டுக்காக காஞ்சி மடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களை புனரமைக்க காஞ்சி மடம் நிதியுதவி செய்து வருகிறது.கடலூரில் உள்ள நந்தனார் கோவிலில் கடந்த 1970ம் ஆண்டு காஞ்சி மடத்தின் சார்பில் கும்பாபிஷேகம்நடத்தப்பட்டது.
தலித் மக்களுக்காக காஞ்சி மடத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அவர்கள்அங்கு வரலாம் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications