தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட் ரூ. 80,000: அரசு பரிந்துரை
சென்னை:
தனியார் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசின் கொள்கைஅறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சீட் ரூ. 80,000க்கு விற்கலாம் என அரசே பரிந்துரைத்துள்ளது.
ஆனால், தனியார் கல்லூரிகள் குறைந்தபட்சம் ரூ. 10 லட்சமாவது வசூலித்துக் கொண்டு தான் சீட்களைஒதுக்குவார்கள் என்று தெரிகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை நிரம்புவது குறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர்சி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
சிறுபான்மை அல்லாத, சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் 40 சதவீத இடத்தை நிர்வாகம் நிரப்பிக் கொள்ளும்.மீதமுள்ள 60 சதவீத இடங்களுக்கு மாணவர்களை, அரசு தேர்வு செய்யும். நுழைவுத் தேர்வு கட்-ஆப் மார்க் மற்றும்கவுன்சிலிங் மூலம் இந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
சிறுபான்மை சுய நிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை 60 சதவீத இடங்களை நிர்வாகவே நிரப்பிக் கொள்ளலாம்.மீதி 40 சதவீத இடங்களை அரசு எடுத்துக் கொண்டு மாணவர்களைச் சேர்க்கும்.
அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக விதிகளின் படியும் மாணவர்சேர்க்கையை கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவப் படிப்புகளுக்கான ஆண்டுக் கட்டணத்தையும் அரசு உத்தேசமாக நிர்ணயித்துள்ளது.
அதன்படி, எம்.பி.பி.எஸ்.படிப்புக்கு ரூ. 80,000, பி.டி.எஸ். படிப்புக்கு ரூ. 55,000, பி.பார்ம் 22,000, பி.எஸ்.சிநர்சிங் 25,000, பி.பி.டி, பி.ஓ.டி ஆகிய படிப்புகளுக்கு ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படாது என்றும் டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
அரசு இவ்வாறு அறிவித்தாலும் எந்தத் தனியார் மருத்துவக் கல்லூரியும் ரூ, 80,000க்கு மருத்துவ சீட்டைத் தருமாஎன்பது சந்தேகம் தான். இங்கே மாணவர்களிடம் ரூ. 80,000க்கு ரசீது கொடுத்துவிட்டு குறைந்தபட்சம் ரூ. 10லட்சத்தையாவது இந்தக் கல்லூரிகள் பறிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications