செஞ்சி ராமசந்திரன் ராஜினாமா
டெல்லி:
தனது உதவியாளர் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முதலில் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அவர் பிடிவாதம் பிடித்தார். ஆனால், பிரதமர் வாஜ்பாயின்நெருக்குதலால் அவர் விலக ஒப்புக் கொண்டார்.
இப்போது ராஜினாமா செய்துவிட்டால், சி.பி.ஐ. சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து ஒருவேளை தப்பினால்மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வோம். அப்படி இல்லாவிட்டால் சனிக்கிழமை (இன்று) நடக்கும்அமைச்சரவை மாற்றத்தின்போது நீங்கள் விலக்கப்படுவீர்கள் என வாஜ்பாயின் அலுவலகத்தில் இருந்து அவருக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்றிரவு அவர் தனது ராஜினாமா கடிதத்தை வாஜ்பாய்க்கு அனுப்பி வைத்தார்.
உறவில் பாதிப்பில்லை: ராமச்சந்திரன்
இந் நிலையில் எனது ராஜினாமாவால் மதிமுகவுக்கும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையிலான உறவுபாதிக்கப்படாது என செஞ்சி ராமசந்திரன் கூறினார்.
தனது உதவியாளரின் ஊழல் அம்பலமானதால் பதவியை விட்டு விலகிய ராமச்சந்திரன் இன்று காலை சென்னைதிரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த ஊழல் புகாருக்கு தார்மீக பொறுப்பேற்று நானாகத் தான் பதவி விலகினேன். இந்த விவகாரத்தால் பிரதமர்வாஜ்பாய்க்கு சங்கடம் நேருவதை நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்த ராஜினாமாவால் இருகட்சிகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படாது.
இந்த ஊழல் விஷயத்தில் என்னை மாட்டிவிட சதி நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதையும் சிபிஐவிசாரிக்க வேண்டும். விசாரணையின் இறுதியில் நான் குற்றமற்றவன் என்பது நிரூபணமாகும்.
எங்கள் தலைவர் வைகோவை சிறையில் சென்று சந்திப்பேன். தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்றார் செஞ்சிராமச்சந்திரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications