பளார் பாண்டுரங்கன்
சென்னை:
மீண்டும் அமைச்சராகியுள்ள பாண்டுரங்கன், கடா மீசையுடன் உலா வருபவர், மிக சுவாரஸ்யமானவர்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் காலில் விழுவார்கள், குனிந்து நின்று பவ்யம்காட்டுவார்கள்.
ஆனால், இவரோ ஜெயலலிதாவைப் பார்த்தால் சாமியைப் பார்த்து மாதிரி கன்னத்தில் போட்டுக் கொள்வார்.
(அறைந்துகொள்வார் என்று சொல்வதே சரி. அந்த அளவுக்கு ஓங்கி கன்னத்தில் அடித்துக் கொள்வார்.)
இதைப் பற்றிக் கேட்டால் சாமியை பார்த்தா கன்னத்துல பேட்டுக்கிறது இல்லையா. அம்மாவும் சாமி தான் என்கிறார்.
வள்ளல் தளவாய் சுந்தரம்:
அதிமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது கோர்ட் படிக்கட்டுகளில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தகாலத்தில் கூடவே வருவார் தளவாய் சுந்தரம்.
வழக்கறிஞரான இவர் ஜெயலலிதாவுக்காக வாதாடியது இல்லை. ஆனால், கூடவே வருவார் போவார். இதனால் எம்.பி.பதவி கிடைத்தது. தொடர்ந்து பொதுப் பணித்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறை கிடைத்தது.
ஆனால், வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது கல்வித்துறை அமைச்சராக இருந்த தம்பிதுரையின் கல்லூரிக்கு அரசு நிலத்தைவாரிக் கொடுத்த வள்ளல் இவர். இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே டான்சி நில விவகாரத்தில் சிக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது டென்சனைக் கொடுக்க தம்பிதுரையும், தளவாய்சுந்தரமும் பதவி இழந்தனர்.
இப்போதும் தம்பிதுரை ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார். ஆனால், தளவாய்க்கு நல்ல காலம் பிறந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications