ராணி மேரிக் கல்லூரி: பாலு உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து
சென்னை:
ராணி மேரிக் கல்லூரியைக் காக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பிறப்பித்தஉத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர் நீதின்றம் அந்தத் தடையை ரத்து செய்துள்ளது.
கடற்கரையோர நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கத் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மத்திய அரசுகூறியுள்ளது. ஆனால், ராணி மேரிக் கல்லூரியை இடிப்பதைத் தடுக்கவே இந்த த்தரவை பாலு பிறப்பித்துள்ளதாகதமிழக அரசு குற்றம் சாட்டியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவம், பாலுவின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தார்.
இதை எதிர்த்து மத்திய சுற்றுச்சூழல்துறை மனு தாக்கல் செய்தது. ஏற்கனவே, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின்டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. அப்படியிருக்க தனியாக ஒரு நீதிபதி எப்படி மத்திய அரசின் உத்தரவுக்குத்தடை விதிக்க முடியும் என்று கேட்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பாலசுப்பிரமணியம், இப்ராகிம் கலீமுல்லா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், டி.ஆர்.பாலுவின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி சதாசிவத்தின்உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர், நாங்கள் எந்தக் கட்டடத்தையும்இரவோடு இரவாக இடித்துவிட மாட்டோம். மத்திய அரசு பயப்பட வேண்டாம் என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், இரவோடு இரவாக இடிக்க மாட்டோம் என்கிறீர்கள். அப்புறம் ஏன் அவசரஅவசரமாக ஒரு மனுவைப் போட்டு மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கினீர்கள். இப்போதுஏன் அந்தத் தடையை நீடிக்க வேண்டும் என்கிறீர்கள் என்று கேட்டனர்.
இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications