கெளரவம் பார்க்காதீர்கள்: ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் அறிவுரை
சிதம்பரம்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல் மத்திய அரசு, கர்நாடக அரசுகளிடம் பேசி காவிரிநீரைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச்செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஒரு குறுவை போய், பிறகு சம்பா போய் இப்போது அடுத்த குறுவை வந்துள்ளது. இந்த குறுவைப்பயிரையாவது பயிரிட முடியுமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே, அவர்களது ஏக்கத்தைப் போக்கும் பொருட்டும், காவிரி டெல்டா பகுதியைக் காப்பாற்றும்வகையிலும், கர்நாடக மற்றும் மத்திய அரசுகளிடம் பேசி உரிய நீரைப்பெற தமிழக அரசு முயற்சிக்கவேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி உள்ளதே, அதனுடன் எப்படிப் பேசுவது என்று யோசிக்கக் கூடாது. வேறுவழியில்லை. நமக்குத் தண்ணீர் வேண்டும். அதற்காக கெளரவம் பார்க்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தீர்ப்பு வரட்டும் என்று உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடாது.
புது வீராணம் திட்டத்தில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்தால் சென்னை மக்களுக்குநல்லது நடக்க வாய்ப்பு குறைவுதான்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கடி அமைச்சரவை மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அமைச்சரவைமாற்றம் செய்யும்போது, ஒரு அமைச்சர் எதற்காக நீக்கப்படுகிறார் என்பது மக்களுக்குதெரிவிக்கப்படுவதில்லை. அதை விளக்க வேண்டியது அரசின் கடமை என்றார் சிதம்பரம்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications