சுய மரியாதை தொட்டிலில் வளர்ந்தவன் நான்.. கருணாநிதி பெருமிதம்
சென்னை:
சுய மரியாதைத் தொட்டிலில் தவழ்ந்து, புரண்டு வளர்ந்தவன் நான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக பிரமுகரான திருவாரூர் வேணுகோபால் இல்லத் திருமண விழா, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்அரங்கத்தில் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில்,
சுய மரியாதைத் தொட்டிலில் வளர்ந்தவன் நான். எனவேதான் எனது குழந்தைகளுக்கு வெங்கட்ராமன்,ராமச்சந்திரன், சரஸ்வதி என்று பெயர் வைக்காமல் முத்து, அழகிரி, ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன்.
அப்படியும் கூட ஸ்டாலின், அழகிரி என்பதெல்லாம் வடமொழி எழுத்துகளைக் கொண்ட பெயர்களாகஉள்ளனவே என்று குற்றம் சாட்டி வெளிநாட்டு நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்தப் பெயர்களுக்குரியகாரணங்களை ஏற்கனவே நான் பலமுறை விளக்கியுள்ளேன்.
என் தந்தையின் பெயரான முத்துவேலர் என்ற பெயரை முத்துவாக முதல்மகனுக்கு சூட்டினேன். நான் யாருடையபேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்துக்கு வந்தேனோ அவரது பெயரை அழகிரிக்கு சூட்டினேன்.பொதுவுடமை சித்தாந்தந்தை உலகுக்குத் தந்த ஸ்டாலினின் பெயரை மூன்றாவது மகனுக்கு சூட்டினேன்.
அடுத்து தமிழரசு என்று ஒரு மகனுக்கு பெயர் வைத்தேன். ஆக வீடு, நாடு, கொள்கை, மொழி என இத்தனைக்கும்முக்கியத்துவம் தந்து தான் என் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தேன்.
ஆனால், வட மொழியில் ஆர்வம் கொண்டுள்ளவர்களின் பெயர்களில் ஜெ, ஷ, ஸ ஆகியவை வராமல் இருக்காது.இப்போதெல்லாம் சிலர் (முதல்வர் ஜெயலலிதா) குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது ஜெ, ஸ, ஷ வருகிறதாஎன்று பார்த்து, வேண்டுமென்றே வட மொழிப் பெயர்களைத் தான் சூட்டி வருகின்றனர்.
ஆனால் திராவிட இயக்கத்தில் இருக்கும் நானோ, பேராசியரோ அல்லது மற்றவர்களோ, குழந்தைக்கு வைக்கிறஎந்தப் பெயரானாலும் வட மொழிக் கலப்பில்லாமல், தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கிற பெயர்களைத் தான்சூட்டுவோம் என்பதை அனைவரும் அறிவர் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications