ராமதாஸ் மீது இளங்கோவன் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு. இதில் சோனியாதலையிட கோருவது ஏன்? என்று டாக்டர் ராமதாசுக்கு இளங்கோவன் கேள்வி விடுத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் கிருஷ்ணாவுக்கு புத்திமதி சொல்லிதமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சோனியா காந்திக்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்விடுத்துள்ள அறிக்கை விவரம்:

காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக மாநில முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணாவிடம் சொல்லவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

காவிரி நதி நீர்ப் பங்கீட்டு பிரச்சனை என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த பல ஆண்டுகாலாமாக இரு மாநில அரசுகளுக்கு இடையிலான இந்த பிரச்சினைக்கு. இதில் சுமூகமான தீர்வுகாணப்பட முடியாமல் போன காரணத்தால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீர்ஆணையம் அமைக்கப்பட்டது.

அது வழங்கிய இடைக்கால தீர்ப்பு நிறைவேற்றப்பட்டாமல் இந்த பிரச்சினை இழுபறியாக இருந்துவருகிறது. இப்போது இந்த பிரச்சினை உச்சநீதிமன்றம் முன் இருக்கிறது.

இந் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவிடம் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர்ராமதாஸ் கடிதம் எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காவிரி பிரச்சினை என்பது கர்நாடகம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையிலானபிரச்சினை.

இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தவறான அணுகுமுறைபிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டது.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்ததாகும்.மத்திய அரசுதான் கர்நாடக, தமிழக மாநில அரசுகளுடன் பேசி தீர்வு காண வேண்டும்.

மேலும், பா.ம.க.வை சேர்ந்த இருவர் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அந்தஅமைச்சர்களும், டாக்டர் ராமதாசும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதமரை வற்புறுத்தி இந்தபிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

தீர்வு காண வேண்டிய இடத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ், சோனியா காந்தியை இந்த பிரச்சினையில்தலையிட சொல்வது தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும்.

பிரதமர் தனது பொறுப்பை தட்டிக் கழிப்பாரானால் டாக்டர் ராமதாஸ் கட்சியை சேர்ந்த இரு மத்தியஅமைச்சர்கள் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும்.

தங்களுடைய இயலாமையை மூடி மறைக்க டாக்டர் ராமதாஸ் சோனியா காந்தி மீது பிரச்சினையைதினிக்கப் பார்க்கிறார். அவருடைய இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என்றுகூறியுள்ளார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+