பள்ளிக் கட்டடம்: எம்.ஜி.ஆர். உறவினர்கள் இடையே மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஜானகி அம்மையாரின் நினைவுப் பள்ளியின் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டகட்டடத்தை பயன்படுத்தக் கூடாது என்று எம்.ஜி.ஆன் உறவினரான சுதா விஜயகுமாருக்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக எம்.ஜி.ஆரின் மற்றொரு உறவினர் எம்.ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தட் மனுவில் கூறியிருந்ததாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம் பகுதியில், டாக்டர் எம்.ஜி.ஆர்.- ஜானகி நினைவுப் பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரியர் குடியிருப்புக்கான இடத்தில், பள்ளிக் கட்டடத்தைக் கட்ட சுதா விஜயக்குமார்முடிவு செய்தார்.

இதற்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அந்த அனுமதி கிடைக்கும் முன்பாகவே, கட்டடம் கட்டும் பணிகளைத் தொடங்கினார் சுதா விஜயக்குமார்.இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் எனது சார்பில் ஆட்சேபனைகளைத்தெரிவித்திருந்தேன். இருப்பினும் சுதா தொடர்ந்து கட்டடப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந் நிலையில், கட்டடப் பணிகளை நிறுத்துமாறு கடந்த மே 21ம் தேதி சென்னை பெருநகர வள்ச்சிக் குழுமம்சுதாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் கட்டடப் பணிகள் நிறுத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்தப் புதிய கட்டடத்தை 30நாட்களுக்குள் இடிக்குமாறு கடந்த 5ம் தேதி வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டது.

ஆனாலும் அதையும் சுதா மதிக்கவில்லை. இதனால் தான் இப்போது மீண்டும் ரிட் மனுவைத் தாக்கல்செய்துள்ளேன் என்று தனது மனுவில் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, புதிதாக கட்டியுள்ள கட்டடத்தை சுதா விஜயக்குமார் பயன்படுத்தக் கூடாது.மேலும் புதிதாக எந்தக் கட்டடம் கட்டக் கூடாது என்று உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+