திமுக- பா.ஜ.க. கூட்டணி உடையலாம்: கருணாநிதி தகவல்
சென்னை:
கூட்டணிக்காக திமுக யாரையும் நாடிச் செல்லவில்லை. அதே நேரத்தில் எங்கள் கதவுகள் எல்லோருக்கும் திறந்தேஇருக்கின்றன என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துளளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக- பா.ஜ.க. இடையிலான கூட்டணியில் மாற்றம் வரலாம் என்பதை அவர்சூசகமாகத் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கூட்டணி விஷயத்தில் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன. பா.ஜ.கவோடு கூட்டணியில் சேரும்போதுஅவர்கள் யாரையும் ஆதரிக்கக் கூடாது என்று, யாரையும் பாராட்டிப் பேசக் கூடாது என்று நாங்கள் விதிமுறைஏதும் விதிக்கவில்லை.
இதனால் அவர்கள் அதிமுகவோடு நெருக்கம் காட்டியபோதும், அதிமுகவைப் பாராட்டும்போதும் அதை நாங்கள்கண்டுகொள்ளவில்லை.
அதே நேரத்தில் கூட்டணிக்காக யாரிடமும் போய் நிற்கும் கட்சியல்ல திமுக. வீட்டுக்குள் ஒரு நண்பர் (பா.ஜ.க.)இருக்கிறார் என்பதற்காக கதவைப் பூட்டியா வைத்துவிட முடியும். கதவைத் திறந்து தான் வைக்க முடியும். அதுவேறு ஒரு நண்பர் உள்ளே வருவதற்காகவும் இருக்கலாம் அல்லது உள்ளே இருக்கும் நண்பர் வெளியேபோவதற்காகவும் இருக்கலாம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications