சென்னை கப்பலில் விஷ வாயு கசிவு: வாலிபர் பலி- மூவர் மயக்கம்
சென்னை:
சென்னை துறைமுகத்தில், கப்பலில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி விஷ வாயுதாக்கி பலியானார். 3 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில், தூர்வாரும் பணியில் டைடண்ட் பிரைட் என்ற கப்பல் ஈடுபட்டுள்ளது. அப்போது அந்தக்கப்பலின் என்ஜினில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழுதை சரிசெய்ய விஷத்தன்மை கொண்ட கார்பன் டெட்ரா குளோரைடு வாயு பயன்படுத்தப்பட்டது.
ஆனால், உரிய பாதுகாப்பு முகமூடி அணியாமல் அந்த வாயு இருந்த சிலிண்டெரை இவர்கள் திறந்தனர்.
இந்த விஷ வாயு தாக்கி ராஜேஷ் என்ற ராஜன் (வயது 27) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். நாகராஜ், கந்தன்,மணிகண்டன் ஆகிய மற்ற 3 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து மூவரும் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள்உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக இருந்த கப்பல்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications