ராணி மேரிக் கல்லூரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு பதில் மனு
சென்னை
கடலோர பகுதிகளில் உள்ள புராதனக் கட்டடங்களை இடிப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதித்துள்ளதடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சார்பில் இன்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராணி மேரிக் கல்லூயை இடித்து விட்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டதை எதிர்த்துபெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், கடலோரப் பகுதிகளில் ரூ. 5 கோடிக்கு மேலான திட்டப்பணிகளுக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று அத் துறையின் திமுக அமைச்சர்டி.ஆர். பாலு உத்தரவை வெளியிட்டார்.
இதை எதிர்த்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அந்த மனுவில், பாலுவின் உத்தரவு அரசியல் உள்நோக்கம் கொண்டது, தன்னிச்சையானது,சட்டவிரோதமானது என்று கூறிய தமிழக அரசு, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியது.
இதையடுத்து இடைக்காலத் தடை விதித்தார் நீதிபதி. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையடுத்துதடை நீக்கப்பட்டது. அதே நேரத்தில் பாலுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபிபப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ராணி மேரிக் கல்லூரியை மனதில் வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கடலோர கட்டடங்களைஇடித்து விட்டு புதிய கட்டடங்களை எழுப்ப அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள்கோரிக்கை விடுத்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவுமே இல்லை என்றுகூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications