கோஷ்டிப் பூசலுக்கு முடிவு கட்ட சோ.பா.வுக்கு எம்.எல்.ஏ. கோரிக்கை
சென்னை:
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று இளங்கோவன் மற்றும் வாசன்கோஷ்டியினருக்கிடையே நடந்த மோதல் தொடர்பாக விவாதிக்க உடனடியாக காங்கிரஸ் கட்சியின் அரசியல்விவகாரக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயக மூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.
வட சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லப்பா சத்திய மூர்த்தி பவனில் தாக்கப்பட்டதைக் கண்டித்துஅவர் தலைமையில் நேற்ற ஒரு பிரிவினர் சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இவர்கள் அனைவரும் வாசன் கோஷ்டியினர். இவர்களுக்கு எதிராக இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்த சிலர்உண்ணும் விரதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு பிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது.
இந்த சம்பவம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏவான விநாயக மூர்த்தி, கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கு ஒருகடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது கட்சிக்குக் களங்கத்தைஏற்படுத்தும்.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும். எனவே இது குறித்து விவாதிக்க கட்சியின் அரசியல்விவகாரக் குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார். விநாயக மூர்த்தி வாசன்கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications