கந்து வட்டிக் கொடுமைக்கு 3 பேர் தற்கொலை
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், கந்து வட்டிக்கார்களின் தொல்லை தாங்காத ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து காண்டனர்.
கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்ட தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தும் கூட ஆங்காங்கேகந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான்செய்கிறது.
ராஜபாளையம், வெங்கடேஸ்வர் நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் தனது தொழிலைஅபிவிருத்தி செய்வதற்காக 8 பேரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார்.
அசலையும், வட்டியையும் சரியாக கட்ட முடியாத காரணத்தால், நிலை தடுமாறியசின்னத்தம்பியை, கடன்கொடுத்தவர்கள் மிரட்ட ஆரம்பித்தனர்.
மிரட்டல் அதிகமாகவே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த சின்னத்தம்பி குடும்பத்தோடுதற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு சின்னத்தம்பி, மனைவி விஜயலட்சுமி, மகன் சீனிவாசன்ஆகியோர் விஷம் குடித்தனர். வெளியே போய் விட்டு வீடு திரும்பிய மகள் ஜெயலட்சுமி, 3 பேரும்இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
கந்து வட்டிக்காரர்கள் தான் தனது குடும்பத்தினரின் தற்கொலைக்குக் காரணம் என்று அவர்கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சின்னத்தம்பிக்கு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்த அரசு ஊழியர்கள்சந்திரபிரகாஷ், மாரித்து, நாகராஜ், குருசாமி, வெள்ளையப்பன் மற்றும் பாண்டி, முருகேசன்,குருசாமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சந்திரபிரகாஷ், பாண்டி ஆகியோரைத்தவிர மற்ற 6 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications