கர்ப்பமான காதலி-காதலனுக்கு பெண் போலீசார் நடத்திய திடீர் திருமணம்
சென்னை: காதலித்து வந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு, ஆடி மாதத்தைக் காரணம் காட்டி அவரைத் திருமணம் செய்யமறுத்த வாலிபரை, பெண் போலீஸார் தலையிட்டு மணம் முடித்து வைத்தனர்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருபவர் சக்திவேல். இவரது சொந்த ஊர் திண்டிவனம்.சக்திவேல், தன்னுடன் வேலை பார்த்து வந்த வள்ளி என்ற பெண்ணைக் காதலித்தார். காதல் கர்ப்பத்தில் முடிந்தது.
அதன் பிறகு வள்ளியை தவிர்க்க ஆரம்பித்தார் சக்திவேல். தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு வள்ளிவற்புறுத்தவே, ஆடி மாதம் நடக்கிறது, எனவே பின்னர் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நிலைமை எல்லை மீறிப் போவதற்குள் வீட்டில் சொல்லி விடுவோம் என்று நினைத்த வள்ளி பெற்றோரிடம்விஷயத்தைக் கூறியுள்ளார்.
அதிர்ந்து போன அவர்கள், வள்ளியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சக்திவேலிடம் கேட்டுள்ளனர்.
அவர்களிடமும் ஆடி மாதத்தைக் காரணமாக கூறி கல்யாணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் சக்திவேல். மேலும்ஊரிலிருந்து கிளம்பிவிடவும் திட்டமிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அடையாறு பெண் போலீஸ் நிலையத்தில் வள்ளியின் தாயார் ஜெகதாம்பாள் புகார் கொடுத்தார்.
சக்திவேலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த பெண் போலீஸார், உடனடியாக வள்ளியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினர். அதை ஏற்க சக்திவேல் மறுக்கவே, கைது நடவடிக்கை பாயும் என எச்சரித்தனர்.
இதையடுத்து வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தார் சக்திவேல். பின்னர் அடையாறு சிக்னல் அருகே உள்ளபெரிய பாளையத்தம்மன் கோவிலில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நித்யகுமா மற்றும் பெண் காவலர்கள், இரு வீட்டுஉறவினர்கள் முன்னிலையில் காதலி வள்ளி கழுத்தில் தாலியைக் கட்டினார் சக்திவேல்.
பிறகு காவல் நிலையத்திற்கு வந்து அங்கும் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு அறிவுரையும், இனிப்பும்வழங்கி ஆசிர்வதித்தனர் பெண் காவலர்கள்.
சக்தி வேலின் நடவடிக்கைகள் உளவுப் பிரிவினர் மூலம் கண்காணிக்கப்படும் என்றும், வள்ளியை நன்றாகவைத்துக் கொள்ளுமாறும் அவரிடம் கூறப்பட்டுள்ளது.
-->-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications