8,063 அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் மீண்டும் வேலை
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 8,063 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திங்கள்கிழமை முதல் பணிக்கு வரலாம்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேலை நிறுத்தம் செய்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 14,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 8,063பேரை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்தெவித்தது.
மேலும் 6,072 பேர் மீது நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி முடிவெடுக்கும்.
இதையடுத்து மீண்டும் வேலை பெறப் போகும் 8,063 பேர் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. எப்போதுமீண்டும் வேலை கொடுக்கப்படும் என்ற தெளிவற்ற நிலையும் நிலவி வந்தது.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில்கூறியுள்ளபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணியில் சேர்க்கப்படவுள்ள 8,063 பேரும் திங்கள்கிழமை தல்பணியில் சேரலாம்.
இதற்குத் தேவையான உத்தரவுகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றார்.
வேலையில் சேர்க்கப்படுவோரின் பட்டியல் இன்றும் நாளையும் அந்தந்த அலுவலகங்களில் ஒட்டப்படும்.
இதற்கிடையே, டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 6,072 பேன் நிலை குறித்து பெரும் குழப்பம்நிலவுகிறது. இவர்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலக ஊழியர்கள்.
இவர்கள் மீது ஸ்டிரைக்கைத் தூண்டியதாகவும், ஊக்குவித்ததாகவும், வேலைக்குப் போனவர்களை ஸ்டிரைக்கில்கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு டிவு செய்துள்ளது. குறிப்பாக தலைமைச் செயலகஊழியர்கள் யாரையும் மன்னிக்க அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
காரணம், ஜூலை 1ம் தேதி முதலே தலைமைச் செயலக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் இறங்கினர். மற்ற ஊழியர்கள்அனைவரும் 2ம் தேதி முதல்தான் ஸ்டிரைக்கில் கலந்துகொண்டனர். எனவே, தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுஊழியர்களை ஸ்டிரைக்கில் ஈடுபடத் தூண்டியதாகத் தலைமைச் செயலக ஊழியர்கள் மீது புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications