Vijay: முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேனு மிரட்டிய மார்க்கண்டேயன்! ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் நடந்த ஒரு விழாவில் சட்டசபையை கூட்டட்டும் விஜய்யின் எலும்பை உடைப்போம் என விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மிரட்டல் விடுத்தார்.

DMK MLA Markandeyan

இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் கடந்த திங்கள்கிழமை காலை மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவர் எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 11 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இதனிடையே திமுகவினர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மார்க்கண்டேயன் உடம்பு சரியில்லாதவர், அவரை இதுவரை கண்ணில் காட்டவில்லை என கூறி முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மார்க்கண்டேயனை இரவில் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு ஆஜர்படுத்திய நிலையில் அவரை, ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி சுமதி உத்தரவிட்டார். இதையடுத்து மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் கோரி, அவரது வழக்கறிஞர்கள் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அது போல் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதி சுமதி நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது மார்க்கண்டேயன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மார்க்கண்டேயனிடம் போலீஸார் போதிய அளவுக்கு விசாரணை நடத்தி விட்டார்கள். எனவே போலீஸ் காவல் தேவையில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதே போல் முதல்வர் குறித்தும் மிக கடுமையான வகையில் மிரட்டல் விடுத்து பேசியிருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பு வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவையும், கஸ்டடி கேட்ட காவல் துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில், நான் எத்தனை நாள் சிறையில் இருக்கிறேனோ, அத்தனை வேகத்தில் ஆட்சிக்கு வந்துவிடுவேன், மேலும் சிறையில் நன்றாக இருக்கிறேன். அங்கு 25 -க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதை படித்து வருகிறேன். எந்நை பார்க்க யாரும் வர வேண்டாம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு எப்போது விசாரணைக்கு வரும் என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+