சென்னைவாசிகளின் "மெளன அஞ்சலி"!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் பல ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த சீரணி அரங்கம்தரைமட்டமாக்கப்பட்டதையொட்டி அந்த இடத்தை சென்னை நகர மக்கள் பார்வையிட்டவண்ணம் உள்ளனர்.
இத்தனை நாட்களாக இருந்த சீரணி அரங்கம், இருந்தஇடத்தைப் பார்த்து கிட்டத்தட்ட மெளன அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
கடந்த 1968ம் ஆண்டு கட்டப்பட்டது. சீரணி அரங்கம். அதற்கு முன்பு வரை இந்த இடத்திற்குத் திலகர் திடல்என்றுதான் பெயர் இருந்தது. இங்கு பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், சுப்ரமணிய பாரதியார் என பெரும்தலைவர்கள் பலரும் பேசியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட காலத்தின்போது, இங்கிருந்துதான் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தலைவர்களின் செய்திகள்சென்று சேரும்.
1963ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் அமைக்கப்பட்ட திமுக சீரணியினர் என்ற படையினரால் இங்குதிறந்தவெளி மேடை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு சீரணி அரங்கம் என்று பெயர் வந்தது.
ஆனால் திலகர் திடல் என்ற பெயரை திமுகவினர் சீரணி அரங்கம் என்று மாற்றி அமைத்ததற்கு அப்போது பலரும்கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் சீரணி அரங்கம் என்ற பெயரே நிலைத்தது.
சீரணி அரங்கம் தரைமட்டமாக்கப்பட்டது, மெரீனா கடற்கரைக்குச் செல்லும் செல்லும் மக்களின் மனதில் சொல்லமுடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது.
காலை வழக்கம்போல நடைப் பயிற்சிக்கு வந்தவர்கள் சீரணி அரங்க மேடையைக் காணாமல்
அதிர்ச்சியுற்றனர். நேற்று வரை இருந்த சீரணி அரங்கம், திடீரென மாயமானது எப்படி என்று அனைவரும்அதிர்ச்சியடைந்தனர். அது இடிக்கப்பட்டது தெரிந்து வருத்தமுற்றனர்.
மேலும் நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் சீரணி அரங்கம் இருந்த இடத்தைப் பார்வையிட்டுவருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications