தஞ்சாவூரில் கனமழை: வீடுகளில் வெள்ளம்- விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி
தஞ்சாவூர்:
காவிரி டெல்டாவில் பலத்த மழை பெய்து வருகிறது. தஞ்சையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம்புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது.
காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடிக்காக நீரை எதிர்பார்த்து கன்னத்தில் கை வைத்தபடி இருந்தவிவசாயிகளுக்கும், குடி நீர்ப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கும் இந்த மழை வரப் பிரசாதமாகஅமைந்துள்ளது.
கடந்த இரு தினங்களாக மழை பெய்தாலும் நேற்றிரவு தான் தஞ்சையில் மிக பலத்த மழை கொட்டியது. சுமார் 4மணி நேரத்தில் 205 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இப் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளில்பெய்துள்ள பலத்த மழை இது தான்.
இதனால் தஞ்சையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் நீரில் மூழ்கின. வீடுகளிலும் வெள்ளம்புகுந்தது. பல குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதே போல புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள், பட்டுக்கோட்டை, வலங்கைமான், சீர்காழி,மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பகுதிகளிலும கன மழை பெய்தது.
கும்பகோணத்தில் மழையால் ஏற்பட்ட மின் கசிவுக்கு இரு விவசாயிகள் உயிரிழந்தனர். தங்களது மோட்டார் பம்ப்செட்டைத் தொட்டபோது இச் சம்பவம் நடந்தது.
இந்த கன மழை காரணமாக சம்பா பயிரை நட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் இடையேதுளிர்விட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications