நம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக ஆதரவை கோரும் பா.ஜ.க-- வைகோவை டெல்லி கொண்டு போக திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதையடுத்து அதிமுகவின் ஆதரவைக் கோர பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

அதே போல அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மதிமுக எம்.பி. என்ற வகையில் வைகோவையும் ஒரு நாள் சிறையில்இருந்து விடுவித்து டெல்லி அழைத்துச் செல்லவும் பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கார்கில் போரின்போது ராணுவத் தளவாடங்கள் வாங்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்தியஅரசை எதிர்க் கட்சிகள் தாக்கி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்யவேண்டும் என கோருகின்றன. ஆனால், அதை பிரதமர் வாஜ்பாய் ஏற்க மறுப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம்கொண்டு வந்துள்ளன.

காங்கிரஸ், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, லாலுவின் ராஷ்டிட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சி, அஜீத் சிங்கின் கட்சி ஆகியவை இந்தத் தீர்மானத்தைஆதரிக்கவுள்ளன.

மக்களவையில் போதிய பலம் இருந்தாலும் மாநிலங்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு பலமில்லை. இதனால்நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க முடிந்தவரை பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதில் பா.ஜ.க.தீவிரமாக இறங்கியுள்ளது.

அதிமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சி நடக்கிறது. இந்தப் பொறுப்புதுணைப் பிரதமர் அத்வானி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்வானி சொன்னால் முதல்வர் ஜெயலலிதா கேட்பார் என்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது மத்தியஅரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும் என்று தெரிகிறது. ஆனால், அதிமுக ஆதரவு தேவையென்றால்நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின் திமுக, மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவோம் என்றஉறுதிமொழி தரப்பட வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் இருந்து நிபந்தனை விதிக்கப்படலாம் வரலாம் எனவும்பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.

இதனால் அதிமுகவின் ஆதரவைத் திரட்ட, ஆன்மீகத் தலைவர் ஒருவரின் உதவியும் நாடப்படும் என்று தெரிகிறது.

ஆனால், தங்களை கூட்டணியில் வைத்துக் கொண்டு ஜெயலலிதாவுடன் பா.ஜ.க தலைவர்கள் பேசுவதை திமுக,மதிமுக ஆகிய கட்சிகளும் எதிர்க்கும் என்றும் தெரிகிறது. இதையடுத்து திமுக, மதிமுக உள்ளிட்ட தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.

அதில தனது நிலையை பிரதமர் வாஜ்பாய் விளக்குவார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியுடன் வாஜ்பாயேதொலைபேசியில் பேசுவார் என்று தெரிகிறது.

திங்கள்கிழமை இந்த நம்பிக்யிைல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. செவ்வாய்க்கிழமைஇரவில் ஓட்டெடுப்பு நடக்கும்.

இதை ஒரு சவாலாகவே பா.ஜ.க. எடுத்துக் கொண்டுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் அதிருப்தியுடன் இருக்கும்திமுக, மதிமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் ஒரு புறம்தொடங்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+