நம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக ஆதரவு தொடர்பாக பா.ஜ.க -திமுக மோதல்; டெல்லிக்கு செல்வார் வைகோ?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதையடுத்து அதிமுகவின் ஆதரவைக் கோர பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.இதனால் பா.ஜ.கவுக்கும் திமுகவுக்கும் இடையே உரசல் தீவிரமடைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க மதிமுக எம்.பி. என்ற வகையில் வைகோவையும் ஒரு நாள் சிறையில் இருந்துவிடுவித்து டெல்லி அழைத்துச் செல்லவும் பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க அதிமுகவின் ஆதரவை பா.ஜ.க. கோரி வருவதால் கடுப்படைந்துள்ளகருணாநிதி, இந்தத் தீர்மானத்தை திமுக எதிர்க்குமா அல்லது ஆதரிக்கும் என்பதை சொல்ல மறுத்துவிட்டார்.

கார்கில் போரின்போது ராணுவத் தளவாடங்கள் வாங்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்தியஅரசை எதிர்க் கட்சிகள் தாக்கி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்யவேண்டும் என கோருகின்றன. ஆனால், அதை பிரதமர் வாஜ்பாய் ஏற்க மறுப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம்கொண்டு வந்துள்ளன.

காங்கிரஸ், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, லாலுவின் ராஷ்டிட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சி, அஜீத் சிங்கின் கட்சி ஆகியவை இந்தத் தீர்மானத்தைஆதரிக்கவுள்ளன.

அதிமுகவின் ஆதரவு:

மக்களவையில் போதிய பலம் இருந்தாலும் மாநிலங்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு பலமில்லை. இதனால்நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க முடிந்தவரை பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதில் பா.ஜ.க.தீவிரமாக இறங்கியுள்ளது.

அதிமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சி நடக்கிறது. இந்தப் பொறுப்புதுணைப் பிரதமர் அத்வானி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்வானி சொன்னால் முதல்வர் ஜெயலலிதா கேட்பார் என்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது மத்தியஅரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும் என்று தெரிகிறது. ஆனால், அதிமுக ஆதரவு தேவையென்றால்நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின் திமுக, மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவோம் என்றஉறுதிமொழி தரப்பட வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் இருந்து நிபந்தனை விதிக்கப்படலாம் வரலாம் என்றுதெரிகிறது.

இதனால் அதிமுகவின் ஆதரவைத் திரட்ட தேவைப்பட்டால், ஆன்மீகத் தலைவர் ஒருவரின் உதவியை நாடவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்வானி- பாலு மோதல்:

ஆனால், தங்களை கூட்டணியில் வைத்துக் கொண்டு ஜெயலலிதாவுடன் பா.ஜ.க தலைவர்கள் பேசுவதை திமுக,மதிமுக கட்சிகள் எதிர்த்துள்ளன. இன்று காலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளின்தலைவர்களுடன் பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிஜூஜனதா தளத்தின் திரிபாதி, தேசிய லோக் தள் கட்சியின் அஜய் செளதாலா, அகாலி தளத்தின் தின்ஸா, சிவசேனையின் சந்திரகாந்த் கைரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் அனைத்து தேசிய ஜனநாயகக் கட்சியின் எம்.பிக்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போதுநாடாளுமன்றத்துக்கு வர வேண்டும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அப்போது தீர்மானத்தை எதிர்கொள்ள அதிமுகவின் ஆதரவையும் நாடுவோம் என அத்வானி தெரிவித்தார்.இதற்கு டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். திமுகவும் மதிமுகவும் கூட்டணியில் இருக்கும்போது எதற்காகஅதிமுகவின் ஆதரவைக் கேட்கிறீர்கள். நமக்குத் தான் போதிய மெஜாரிட்டி உள்ளதே என்றார். இதற்கு அத்வானிபதில் ஏதும் தரவில்லை.

தமிழகம் விரைந்தார் டி.ஆர். பாலு

இதையடுத்து திமுகவைப் பொறுத்தவரை தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்று கருணாநிதி தான்முடிவெடுக்க முடியும் என்றும் பாலு கூறிவிட்டார். இக் கூட்டம் முடிந்தவுடன் பாலு உடனடியாக சென்னைகிளம்பினார். இன்றே தஞ்சாவூர் சென்று அங்கு தங்கியுள்ள கருணாநிதியிடம் டெல்லி நிலைமையை விளக்குவார்என்று தெரிகிறது.

முன்னதாக கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மீது ஜெயலலிதா அரசு எஸ்மா சட்டத்தை ஏவி வருகிறது.இதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் பாலு கேட்டார். அதற்கு அத்வானி, இந்தவிவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு வேண்டியதைச் செய்யும் என்றார்.

இந் நிலையில் திமுக, மதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தை பிரதமர்வாஜ்பாய் கூட்டியுள்ளார். இக் கூட்டம் திங்கள்கிழமை நடக்கிறது. அதில தனது நிலையை பிரதமர் வாஜ்பாய்விளக்குவார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியுடன் வாஜ்பாயே தொலைபேசியில் பேசுவார் என்று தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படலாம் என்றும் டெல்லியில் செய்திகள்கசிகின்றன.

வைகோவின் ஓட்டு:

காலையில் பிரதமர் இல்லத்தில் நடந்த கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ்,தீர்மானத்தை முறியடிக்க அதிமுகவின் ஆதரவு நிச்சயம் கோரப்படும். அதே போல மதிமுக தலைவர் வைகோவைசிறையில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்று வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்யவும் யோசித்து வருகிறோம்என்றார்.

ஆனால், இதை வைகோ ஏற்பாரா என்று தெரியவில்லை.

கருணாநிதி சஸ்பென்ஸ்:

இந் நிலையில் இன்று தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்றுஇன்னும் திமுக முடிவு செய்யவில்லை. இதில் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. கட்சியின் செயற்குழு தான்விவாதித்து முடிவெடுக்கும் என்றார். இதனால் கடைசி நேரம் வரை பா.ஜ.கவை சஸ்பெண்சில் வைக்க கருணாநிதிமுடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

திங்கள்கிழமை இந்த நம்பிக்யிைல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. செவ்வாய்க்கிழமைஇரவில் ஓட்டெடுப்பு நடக்கும் என்று தெரிகிறது.

இதை ஒரு சவாலாகவே பா.ஜ.க. எடுத்துக் கொண்டுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் திமுக, மதிமுக, திரிணமூல்காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அதிருப்தியுடன் இருப்பதால் ஒருவித கலக்கத்துடனேயே இந்த நம்பிக்கை இல்லாதீர்மானத்தை பா.ஜ.க. அரசு சந்திக்கிறது.

இதற்கிடையே இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவைத் திரட்ட காங்கிரசும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது.சோனியாவுடனான மோதலால் விலகி நிற்கும் சரத்பவாரின் கட்சி இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இவை தவிர மேலும் பல சிறிய கட்சிகள், சுயேச்சைகளை வளைப்பதில் பா.ஜ.கவும் காங்கிரசும் களமிறங்கியுள்ளன.

543 பேர் பேர் கொண்ட மக்களவையில், அதிமுகவைச் சேர்க்காமலேயே தங்களுக்கு 323 எம்.பிக்களின் ஆதரவுஇருப்பதாக பா.ஜ.க. தலைமைக் கொறடா மல்ஹோத்ரா கூறியுள்ளார். மக்களவையில் திமுகவுக்கு 12 எம்.பிக்களும்மதிமுகவுக்கு 4 எம்.பிக்களும் உள்ளனர். அதிமுகவுக்கு 11 எம்.பிக்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+